chennireporters.com

லஞ்ச வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் தூக்கிட்டு தற்கொலை. முன்னாள் அமைச்சர்கள் கலக்கம்.

லஞ்ச வழக்கில் சிக்கிய முன்னாள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 25ம் தேதி சென்னை மற்றும் சேலத்தில் உள்ள வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

அதில் கணக்கில் வராத 13 கிலோ தங்கம் 10 கிலோ சந்தன பொருட்கள் சில சந்தன மரத் துண்டுகளும் 13, லட்சத்து 50,000 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தில் உள்ள வீட்டிலும் சோதனை நடைபெற்றது.அங்கும் கொஞ்சம் பணமும் தங்கமும் கைப்பற்றப்பட்டது.

வெங்கடாசலத்திற்கு கடந்த ஆட்சியில் முக்கிய பதவி வகித்த விஐபி ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த விஐபி மூலம் தான் வெங்கடாசலம் மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் பதவியை பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று வெங்கடாசலம் சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .

இறந்து போன முன்னால் மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் வெங்கடாசலத்திற்கு சேலம் மாவட்டம் அம்மன் பாளையத்தில் 40 ஏக்கர் நிலம் இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல தமிழகத்தில் பல முக்கிய பகுதிகளில் வெங்கடாசலலத்திற்கு வீடு மற்றும் நிலங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரினு கிடுக்கிப்பிடி விசாரணை தொடர்ந்ததால் தனக்கு பெரிய நெருக்கடி ஏற்படும் என்று தெரிந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அதிமுக ஆட்சி காலத்தில் முறைகேடாக சம்பாதித்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு  நெருக்கமாக இருந்த உதவியாளர்கள், பினாமிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது வெங்கடாசலத்தின் மரணம் .

இதையும் படிங்க.!