நடிகை சாந்தினி வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.
அவரை ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அழைத்து வந்து விசாரித்தா1ல் தான் சாந்தினி தொடர்பாக பல உண்மைகள் தெரிய வரும் என்கிறார்கள் போலீசார்.
மலேசியா சுற்றுலா துறை அதிகாரியாக பணியாற்றிய சாந்தினி தமிழில் சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.
சென்னையில் தங்கி இருந்த போது தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுக்கும் சாந்தினிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக சாந்தினியுடன் மணிகண்டன் தனியாக குடும்பம் நடத்தி வந்தார்.
சாந்தினி மூன்று முறை கர்ப்பமான தாகவும் அதை கருக்கலைப்பு செய்ய மணிகண்டன் வற்புறுத்தியுள்ளார்.
பல முறை தன்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி சாந்தினி மணிகண்டனிடம் கேட்ட போது அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் சாந்தினிக்கும் மணிகண்டனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தன்னை பற்றி போலீசில் புகார் அளித்தால் சாந்தினியின் ஆபாச படங்களை சமூக வலை தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இது தொடர்பாக சாந்தினி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதன் பிறகு அடையாறு மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இரண்டு தனிப்படைகள் அமைத்து போலீசார் மணிகண்டனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் முன்ஜாமீன் கேட்டு மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதற்கு சாந்தினி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது .அதைத் தொடர்ந்து முன் ஜாமின் கிடைக்காமல் போனதால் மணிகண்டன் தலைமறைவானார்.
போலீசார் மணிகண்டனுடைய செல்போன் நம்பர்களை ஆய்வு செய்து கண்காணித்து வந்தனர்.
மதுரை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் மணிகண்டன் பெங்களூரிலுள்ள அவரது நண்பரின் பண்ணை வீட்டில் தங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அங்கு சென்ற போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.
பின்னர் அங்கிருந்து மணிகன்டணை சென்னைக்கு விசாரணைக்காக அழைத்து வரப்படுகிறார்.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு ள்ளது தமிழக அரசியலில் முன்னாள் அமைச்சர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.