chennireporters.com

#freedom for the legs; ஆகஸ்ட்-15-ல் மாணவிகளின் கால்களுக்கு கிடைத்த சுதந்திரம்.

பழங்குடியின மாணவிகளுக்கு ஆயிரம் மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி சுதந்திர தினத்தன்று (ஆக 15), மெய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இந்தியாவிலுள்ள பழங்குடியின மாணவ, மாணவிகள் தற்சமயம் பள்ளி சென்று கல்வி கற்கத் தொடங்கியுள்ளனர். இதில் ஒரு மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது.தமிழக அரசின் நடவடிக்கையால் பழங்குடி இன மாணவர்கள் கல்வி கற்பதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

 

இந்த சூழலில் நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் பள்ளி செல்லும் தூரம் நீண்ட தூரம் இருப்பதால், பழங்குடி இன மாணவிகள், பள்ளி இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டும், மாணவிகளுக்குத் தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக இந்தியா முழுவதும் ஆயிரம் (1000), மிதிவண்டிகளை பழங்குடியின மாணவிகளுக்கு எய்டு இந்தியா (AID India),  அமைப்பு சார்பில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன் முதற்கட்டமாக 500 மிதிவண்டிகளை தமிழகம் முழுவதும் வழங்கும் துவக்க விழா திருவள்ளூர் மாவட்டம், மெய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினத்தன்று (ஆக 15) நடைபெற்றது.

அப்பள்ளியில் நடைபெற்ற துவக்க நிகழ்வில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 பழங்குடியின மாணவிகளுக்கு மிதிவண்டிகளை எய்டு இந்தியா செயலாளர் முனைவர் பாலாஜிசம்பத், எய்டு இந்தியா நிர்வாகி கோமதி, ஊத்துக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் கே.கணேஷ்குமார்,

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, ஒன்றிய கவுன்சிலர் தேன்மொழி ஏழுமலை, துணைத் தலைவர் மீனா பிரகாஷ், லலிதாபாலகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் கெஜபதி, துணைத் தலைவர் ஆர்.முருகன், டி.டில்லி ஆகியோர் கலந்து கொண்டு மிதிவண்டிகளை வழங்கி மாணவிகளுடன் கலந்துரையாடினர்.

இந்நிகழ்விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.ஆர்.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். அனைத்து மாணவர்களுக்கும் நோட்டு மற்றும் எழுதுகோல் வழங்கினர்.

இதையும் படிங்க.!