விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஆர் டி ஓ ஆபீஸ் அலுவலகம் அருகில் தனியாருக்கு சொந்தமான பில்டிங் ஒன்றில் தடை செய்யப்பட்ட லாட்டரி வியாபாரம் மற்றும் சூதாட்டம் நடைபெற்று வருகிறது.
அருகில் உள்ள காவல் நிலைய போலீசார் சூதாட்டம் நடத்தும் தரப்பினருக்கு பாதுகாப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் மூன்று நம்பர் லாட்டரிகள் மற்றும் பெரிய பிஸ்னஸ் மேன்கள் விஐபிகள் ஆகியோர் ஒரே இடத்தில் உட்கார்ந்து ரம்மி மங்காத்தா என பல லட்ச ரூபாய் வைத்து சூதாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த வியாபாரத்தை பாண்டிச்சேரி மற்றும் விழுப்புரம், திண்டிவனம் ஆகிய பகுதிகளில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி பல வழக்குகளில் உள்ள பாண்டிச்சேரியை சேர்ந்த நடராஜ் மற்றும் டோனி என்ற இருவர்களும் இந்த வியாபாரத்தை நடத்தி வருகின்றனர்.
அங்கு சீட்டாட வரும் பிசினஸ் மேன்கள் விஐபிகளுக்கு வேலை செய்வதற்கு நிறைய ஆட்கள் உள்ளன அதாவது அவர்களுக்கு தேவையான காந்தி சிகரெட் பிரியாணி போன்றவை வெளியில் இருந்து வாங்கி வந்து தருகின்றனர் சில நேரங்களில் அங்கேயே சமைத்தும் தரப்படுகிறது.
அது தவிர அழகிய இளம் பெண்களை வைத்து ஆபாச நடனங்களும் விஐபிகள் ஓய்வெடுக்கும் சில ரகசிய அறைகளும் அங்கு செயல்ப ட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த கட்டிடத்தில் சென்னை, ஆந்திரா, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து பல்வேறு விஐபிகளும் பிஸ்னஸ் மேன்கள் பல ரவுடிகளும் இங்கு வந்து தங்களது பொழுதுபோக்கை கழித்து வருகின்றனர்.
இந்த இடத்தில் ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வரை சூதாட்டம் நடைபெறுவதாக சொல்லுகிறார்கள் ஆர்டிஓ ஆபீசில் பணியாற்றும் சில ஊழியர்கள்.
ஆர்டிஓ ஆபிஸ்க்கு வரும் புரோக்கர்களும் இந்த சூதாட்ட கிளப்புக்கு சென்று சூதாடி வருவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆர்டிஓ அலுவலகத்தில் உள்ள சில அதிகாரிகளும் அடிக்கடி அந்த இடத்திற்கு சென்று தங்களை கூல் பண்ணி வருவதாக சொல்லுகிறார்கள் சில புரோக்கர்கள். எந்த நேரத்திலேயும் அந்த இடத்தில் பெரும் மோதல் நடைபெறும் என்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் சொல்லுகிறார்கள் சில உளவுத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள்.
தமிழ்நாட்டில் லாட்டரி தடை செய்யப்பட்ட பிறகு கள்ளத்தனமாக சில இடங்களில் நடந்தாலும் பாண்டிச்சேரியை தலைமையிடமாகக் கொண்டு அந்தப் பகுதியை சேர்ந்த நடராஜ் டோனி தலைமையில் தமிழ்நாட்டில் அதுவும் ஆர்டிஓ அலுவலகத்திற்கு அருகிலேயே உள்ள ஒரு கட்டிடத்தில் இந்த பிசினஸ் நடைபெற்று வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தவறு நடக்கிறது என்பதை தெரிந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அருகிலே உள்ள காவல்துறையினர் சூதாட்டம் நடத்தும் நபர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். பெரும் மோதல் போக்கும் ஒரு கலவரமும் ஏற்படுவதற்கு முன்னர் போலீசார் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்கின்றனர் ஆர்டிஓ அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள்.