திருமாலின் அவதாரங்களில் அதிகம் கொண்டாடப்படும் அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும். கிருஷ்ணர் அவதரித்த நாளை கிருஷ்ண ஜெயந்தியாக நாம் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 26ம் தேதி அமைந்துள்ளது. இந்த நாளில் கிருஷ்ணனை கோவிலுக்கு சென்றோ, வீட்டில் பல விதமான பலகாரங்கள் செய்து வைத்தோ வழிபட முடியாதவர்கள் இருந்த இடத்தில் இருந்தே அவரது திருநாமங்களை சொல்லி வழிபட்டாலும் கண்ணனின் திருவருளை பெற முடியும். அதிலும் சகாதேவர் அருளிய கிருஷ்ண மந்திரத்தை இந்த நாளில் சொல்வது மிகச் சிறப்பானதாகும்.
கிருஷ்ண ஜெயந்தி என்பது திருமாலின் கிருஷ்ண அவதாரத்தை போற்றுவதற்காகவும், கிருஷ்ணரின் அருளை பெறுவதற்காகவும், கண்ணன் கீதையில் சொன்ன மொழிகளின் படி வாழ்ந்து, இறைவனின் திருவடிகளை அடைவதற்கான வழியை காணும் ஒரு அற்புதமான நாளாகும்.
இந்த நாளில் கண்ணனின் அருளை பெறுவதற்காக வீடுகளிலும், கோவில்களிலும் பல விதமான பூஜைகள், அபிஷேக, அலங்காரங்கள் ஆகியவை நடத்தப்படுகின்றன. வீடுகளில் கிருஷ்ணரின் பாதங்களை கோலமாக வரைந்து, அவருக்கு பிடித்த உணவுகளை சமைத்து படைத்தும் வழிபடுவதுண்டு. அதே போல் கண்ணனை வழிபடும் போதும் அவருக்குரிய பல விதமான மந்திரங்களை சொல்லி பாராயணம் செய்வது சிறப்பு.
கிருஷ்ணன் அருளை பெறுவதற்கு கோகுலாஷ்டமி நாளில் சகாதேவர் இயற்றிய அற்புதமான கிருஷ்ண மந்திரத்தை சொல்லி வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். பாண்டவர்களில் ஒருவர் சகாதேவர். சிறந்த ஞானம் உள்ளவர். பலவித ஜோதிட சாஸ்திரங்களை எழுதி ஜோதிடக்கலையில் வல்லவராக திகழ்ந்தார். பல நுட்பங்களை அறிந்தவர்.
உலகையே காக்கும் கிருஷ்ணரையே தனது கட்டுக்குள் வைக்கக் கூடிய சக்தி படைத்த சிறந்த பக்திமான். கிருஷ்ண பகவானை துதித்து இவர் எழுதிய மந்திரத்தை ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை நினைத்து உச்சரித்தால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பரிபூரண அருள் கிடைக்கும்.
ஆவடி ஒசிஎப் அருகில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ணர் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஆவடி படை உடை தொழிற்சாலை அருகில் உள்ள கிருஷ்ணா மந்திர் திருக்கோயிலில் கிருஷ்ணர் பிறந்தநாள் விழாவில் பல குழந்தைகள் கிருஷ்ணர் வேடமிட்டு கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் வட இந்தியர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிவித்து அவர்களை திருக்கோயிலுக்கு அழைத்து வந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர். குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
கோயிலில் வரும் பக்தர்களுக்கு பிரசாதங்கள் மற்றும் தீர்த்தங்கள் வழங்கப்பட்டன திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கிருஷ்ணரை வழிபட்டு சென்றனர். கிருஷ்ணர் ஜெயந்தி என்பதால் திருக்கோயில் வண்ண விளக்குகள் மற்றும் பூ மாலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
புதிதாக திருமணமானவர்கள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தாய்மார்கள் பலர் தங்களுக்கு கிருஷ்ணரை போன்ற குழந்தைகள் பிறக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.