chennireporters.com

கருவறை தேசத்தின் கடவுள்…….

கவிஞர் ஜீவா.

உலகில் உயர்ந்த சாதி பெண்ணே!கருவறையில்லா தேசத்தில் கடவுள்எதற்கு.? பிரசவ வலி இதுதான் முதல் உலகப்போர்…

பஞ்சபூதம் ஐந்தல்ல!!”ஆறு” நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம் பெண்…ஒரு பெண் சிரிப்பில் உலகம் வசப்படும் .ஒரு பெண்ணின் அழுகையில் பிரபஞ்சமே அழியும்.

இது கவிஞன் கண்ட கனவு.பூந்தோட்டம் பெண்களுக்குமட்டுமே…இன்று மகளிர்தினமாம்…அது ஏன் இன்று மட்டும்…இந்த மூன்றெழுத்து மாதத்தில் பிறந்த மூன்றெழுத்துக்களா இவர்கள்.?

உயிரையும் உறவையும் சுமக்கும் அம்மா , அக்கா ,தங்கை , காதலி,மனைவி, பாட்டி,மழலை, திருநங்கை என உலகத்தில் தன் வாழ்க்கையையே பிறருக்காக அற்பணிக்கும் என் அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் …
*பெண்*
“”பூவுக்குள் மொட்டொன்று…
“”இலையில்லா தொப்புள் கொடியோடு…
“” தண்ணீர் குடமுடைந்து பூவும் இதழ்யிழந்து…
“”மொட்டொன்று  பூவாக புது மொழி பேசும் முன்…
“”பூவே மொட்டுடைந்து பூப்பெய்தி மலர்ந்ததும் புன்னகையில் புதுமலராய்…
“”புது உறவில்…
“”புது இரவில்… கசங்காமல் கசங்கியதும்பூவுக்குள் மொட்டொன்று…

*அவள்

“”நிலவும் சூரியனும் கூட கொடுக்க முடியாத வெளிச்சம்அவள்…

“”அவளுக்காய் தவமிருந்தான் சாமியாரானான் …

“”அவள் நினைவுகளிலியே தேவதாசனானாய்…

“”அவளில்லாமல் துறவியானான்…

“”அவளோடு கணவனாய் …

“”அவளோடு மகனாய் …

“”அவள் என்ற வார்த்தை வலிமை மிக்கது

அவளுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் … இவன்.

          வழக்கறிஞர் .கவிஞர் .ஜெ.ஜீவா

இதையும் படிங்க.!