chennireporters.com

#Gold smuggling; 267 கிலோ தங்கம் கடத்தலில் சிக்கப் போகும் பிஜேபி விஐபி.

சென்னை விமான நிலையத்தில் 60 நாட்களில் 177 கோடி மதிப்புள்ள 267 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் சர்வதேச கும்பலின் தொடர்பு இருப்பதால் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர்.  சென்னையைச் சேர்ந்த முகமது சபீர் அலி youtuber.  அவர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் ஏர் அப் என்னும் பொம்மை மற்றும் பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி6 வருகிறார்.chennai airport,chennai international airport,chennai airport inside,chennai airport flight take off

விமான நிலையத்தில் கடைகள் நடத்த வித் வேதா பி ஆர் ஜி என்னும் நிறுவனம் இந்திய விமான ஆணையத்திடம் உரிமம் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்திடம் 77 லட்சம் ரூபாய் கொடுத்து சபீர் அலி கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கடை ஊழியர்களாக ஏழு பேரை வேலைக்கு வைத்துள்ளார். சபீர் அலி அவர்களுக்கு வித் வேதா பி ஆர் ஜி நிறுவனம் வாயிலாக விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் அடையாள அட்டையும் பெற்றுத் தந்துள்ளார்.  இந்த அடையாள அட்டை பயன்படுத்தி அவரது கடை ஊழியர்கள் விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றுவர முடியும்.

Sri Lankan gang smuggled 267kg gold through You Tuber's airport souvenir shop - The StatesmanCISF apprehends two passengers with fake Aadhaar cards in Delhi airport, raises security concerns - India Today

சில தினங்களுக்கு முன் இலங்கையை சேர்ந்த 30 வயது உடைய ஒரு நபர் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அவர் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில் அவர் ஒன்றை கிலோ தங்க கட்டிகள் கடத்தி வந்தது தெரிய வந்தது. தொடர்விசாரணையில் 60 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு 167 கோடி ரூபாய் மதிப்புள்ள 267 கிலோ தங்க கட்டிகள் கடத்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சபீர் அலி மற்றும் அவரது கடை ஊழியர்கள் இலங்கைப் பயணி என ஒன்பது பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

முகமது சபீர் அலி youtuber.

கடை நடத்த வித் வேதா பி ஆர் ஜி நிறுவனத்திடம் சவீர் அலி கொடுத்த 77 லட்சம் ரூபாயும் அவாலா பணம் என்பதும் தெரிய வந்துள்ளது. தங்கக் கட்டிகள் கடத்தலில் சர்வதேச கும்பல் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. விசாரணையில் கிடைத்த தகவல்களை சுங்கத்துறை அதிகாரிகளிடம் தமிழக போலீசார் பெற்றுள்ளனர். சர்வதேச கும்பல் தொடர்பு இருப்பதால் சிபிஐ அதிகாரிகளுக்கு விசாரித்து வருகின்றனர். சபீர் அலிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு பாஜக மாணவர் அணியை சேர்ந்த பிரித்வி என்பவர் தான் உரிமம் பெற்று தந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

காவிரியில் துரோகம்: சென்னையில் பாஜக அலுவலகத்தை இழுத்து மூட முயன்ற மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது! | Makkal Athikaram cadres lay siege at BJP office - Tamil Oneindia

பாஜக மாணவர் அணியை சேர்ந்த பிரித்வி

மேலும் இந்த கடத்தல் விவகாரத்தில் வித் வேதா பி ஆர் ஜி நிறுவனத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் விமான நிலைய உயர் அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அவர்களின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். தங்கக் கட்டிகள் கடத்துவதற்காக சபீர் அலிக்கு அவர் கடை நடத்த உரிமை பெற்று தந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதை பிருத்திவி மறுத்துள்ளார்.

India-Dubai flights to resume next week? Airlines reopen bookings - The WeekSingapore Airlines to increase flights in India - BusinessToday

ஆனாலும் அவர் தன் சுங்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை வளையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.  சென்னை பாரி முனையில் காளிகாம்பாள் கோவில் அருகே அவரது வீடு உள்ளது. பிரித்வி உடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த ஒரு முக்கிய பாஜக விஐபிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சமீர் அலியின் கடையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதை தொடர்ந்து மேலும் அந்தப் பகுதியில் உள்ள சில கடைகளிலும் நேற்று சோதனை செய்தனர்.

Gold smuggling syndicate busted at Chennai airport; 267 kg gold worth Rs 167 crore smuggled inAirport official under scanner in 267-kg gold smuggling case in Chennai - India Today

கடத்தல் கும்பல் பின்னணி மற்றும் அதில் தொடர்புடைய நபர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வெளிநாடுகளில் இருந்து தங்கக் கட்டிகள் கடத்தி வரும் ட்ரான்ஸிஸ்ட் பயணியர் சென்னை விமான நிலைய கழிப்பறைக்கு செல்வார்கள். அவர்களை பின்தொடர்ந்து சபீர் அலி கடை ஊழியர்களும் செல்வார்கள் கழிப்பறையில் தங்க கட்டிகள் கைமாற்றப்படும் சபீர் அலி கடை ஊழியர்கள் அதை ஆடையில் மறைத்து வைத்து வெளியே எடுத்து வருவர். அவர்களிடம் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் அடையாள அட்டை இருப்பதால் சுங்கத்துறை மற்றும் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்ய மாட்டார்கள்.

DRI arrests Two Handlers in Gold Smuggling Operation in Ahmedabad; 4 kg Gold Seized worth ₹2.59 Crore

பின்னர் பல்லாவரத்தில் தங்கி இருக்கும் கடத்தல் கும்பலை சந்தித்து தங்க கட்டிகளை ஒப்படைத்து விடுவார்கள். இப்படித்தான் சபீர் அலி தங்க கட்டி கடத்தல் வியாபாரம் நடைபெற்று வந்தது. இதில் சிபிஐ வளையத்தில் பிஜேபியை சேர்ந்த சில முக்கிய விஐபிகள் சிக்குவார்கள் அவர்களை மத்திய அரசு காப்பாற்றும் வேளையில் ஈடுபட்டுள்ளதாகவும், சென்னை விமான நிலைய உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க.!