chennireporters.com

#goondas act; சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது.

சி எம் டி ஏ அதிகாரியின் புகாரின் பேரில் சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சங்கர் என்கிற சவுக்கு சங்கர் தகப்பனார் பெயர் ஆச்சிமுத்து மதுரவாயல் சென்னை என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு தற்போது கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

Sandeep Rai Rathore IPS🇮🇳 (@SandeepRRathore) / X

சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப்பிராயர் ரத்தோர்

சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப்பிராயர் ரத்தோர் அவர்கள் சங்கர் என்கிற சவுக்கு சங்கர் மீது குண்டல் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் இதற்கான குண்டல் தடுப்பு காவல் அறிக்கை கோயம்புத்தூர் சிறையில் உள்ள சவுக்கு சங்கருக்கு இன்று 12/5/2024 அன்று சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் மூலம் சார்வு செய்யப்பட்டது

10 மணி நேரமாக நீடித்த சோதனை.. சென்னையில் உள்ள சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்திற்கு போலீசார் சீல் | Theni police seals 'Savukku' Shankar's house, office in Chennai - Tamil Oneindia

அவர் மீது சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் சவுக்கு சங்கருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள மேற்படி வழக்கு உட்பட ஏழு வழக்குகளில் மூன்று வழக்குகள் விசாரணையிலும் இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு மீதமுள்ள ரெண்டு வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளது.


கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை கோயம்புத்தூர் சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர் அவரை அங்கிருந்து கோயம்புத்தூருக்கு சென்று விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் அவர் மீது தொடர்ந்து தமிழகம் முழுவதும் பலர் புகார் அளித்து வருகின்றனர்

ஏற்கனவே உயர் போலிஸ் அதிகாரி பெயருக்கு கலங்கும் விளைவிக்கும் வகையில் பெண் போலீஸ் அதிகாரிகள் பற்றியும் காவலர்கள் பற்றியும் கண்ணியக் குறைவாகவும் மிக அநாகரிகமாகவும் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார் அதனை தொடர்ந்து பலர் அவர் மீது பல்வேறு புகார்கள் கூறி வருகின்றனர் இந்த நிலையில் ரெட் பிக்ஸ் நிறுவனத்தின் எடிட்டர் பிலிப்ஸ் ஜெரால் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார்

After Savukku Shankar, now Red Pix editor Felix Gerald arrested for YouTuber's comments against women cops

அவரை திருச்சி போலீசார் ரயில் மூலம் திருச்சிக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர் இந்த நிலையில் இன்று தமிழக காவல்துறை சென்னை மாநகர ஆணையர் சந்திப்பு ஆயிரத்தோர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க.!