chennireporters.com

ஒன்பது கூடுதல் அட்வகேட் ஜெனரல் நியமனம் தமிழக அரசு உத்தரவு..

தமிழ்நாடு அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக 9 வழக்கறிஞர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதும் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக அட்வகேட் ஜெனரல் ஆர். சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார்.

புதிய அரசு பொறுப்பேற்ற சமயத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் முற்றிலுமாக செய்யப்படவில்லை தற்காலிகமாக அரசு வழக்கறிஞர்கள் பலர் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் காலியாக இருந்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் பதவிகளுக்கு மூத்த வழக்கறிஞர்கள் ஒன்பது பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ இறையன்பு வெளியிட்டுள்ளார் அதில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜராக ஏழு வழக்கறிஞர்கள்கூடுதல் அட்வகேட் ஜெனரல் பொறுப்பை ஏற்றுள்ளனர்.

மூத்த வழக்கறிஞர்கள் காஜா நசிருதீன், எஸ். சிலம்பண்ணன், ஆர். ராமன்லால்
வி.அருண், ஜெ. ரவிச்சந்திரன், பி.குமரேசன் நீலகண்டன் ஆகியோரும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராக மூத்த வழக்கறிஞர வீர.கதிரவன், ஆர்.பாஸ்கரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!