chennireporters.com

ஏர் ஆம்புலன்ஸாக மாறும் தமிழக அரசின் ஹெலிகாப்டர்.

அரசு முறை பயணங்களுக்காக பயன்படுத்தப்படும் தமிழக அரசின் ஹெலிகாப்டர் கடந்த சில வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்து வருகிறது.

அதை மீண்டும் பயன்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.தமிழக அரசிடம் ஆகஸ்ட் 2005 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பெல் 412 ஈ.பி. ரக ஹெலிகாப்டர் ஒன்று உள்ளது.

சென்னை மீனம்பாக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளஅந்த ஹெலிகாப்டர் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இயக்கப்படாமல் உள்ளது.அரசுமுறை பயணங்க
ளுக்காக முதலமைச்சரால் பயன்படுத்தப்படும் இந்த ஹெலிகாப்டர் இதுவரை 2449 மணிநேரம் பறந்துள்ளது.

14 பேர் பயணிக்கக்கூடிய வசதியுள்ள இந்த ஹெலிகாப்டர் பேரிடர் காலங்கள் மற்றும் அவசரப் பயணங்களுக்கு பயன்படுத்தும் வகையில் தயார் செய்யப்பட்டதாகும்.

இந்த ஹெலிகாப்டரை ஆம்புலன்ஸாக மாற்றி மருத்துவப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் நடவடிக்கை தொடர்பாக சமீபத்தில் தலைமை செயலகத்தில் நடை பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அதன் முடிவில் இது தொடர்பாக அமைக்கப்பட்ட அதிகாரிகள் கொண்ட குழு இந்த ஹெலிகாப்டரை ஏர் ஆம்புலன்ஸ் ஆக பயன்படுத்தலாம் என அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் தனியார் மருத்துவமனை சார்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அரசின் சார்பாக இத்திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்பட உள்ளது.

ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதிகள் மருத்துவமனைகள் இறங்குவதற்கான வாய்ப்புகள் குறித்த திட்டம் தயாரிக்கப்பட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க.!