தமிழக முதலமைச்சர் அவர்களின் சீரிய நடவடிக்கை காரணமாக உக்ரைனில் மருத்துவக்கல்வி பயின்று வந்த 1921 மாணவர்களில் இதுவரை 1890 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்களில் 1524 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் செலவில் தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.மீதமுள்ள 366 மாணவர்கள் அவர்களது சொந்த செலவில் தமிழகம் திரும்பியுள்ளனர்.
இது தவிர 31 மாணவர்கள் உக்ரைன் மற்றும் அண்டை நாடுகளில் பாதுகாப்பான பகுதிகளில் குடியேறிவிட்டனர்.
அதுதவிர மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்லூரி படிப்பை தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.