பழையனூர் கிராமத்தில் வசிக்கும் சுதாகர் என்பவர் பழையனூர் ஓம் சக்தி நகருக்கு தனியாக மின் மாற்றி வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களிடம் எட்டு மாதங்களுக்கு முன்பு நமது தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் புதிய மின் மாற்றி அமைக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தார்.
அதனிப்படையில் மின் துறைக்கு அரசு கடந்த மாதம் ரூபாய் 9950/- மற்றும் முத்தரையர் கட்டணங்களை ஒதுக்கீடு செய்தது.
இந்நிலையில் புதிய இரண்டு 30 அடி உயரம் கொண்ட மின்கம்பங்கள் அமைக்க ஆரம்ப கட்டணம் ரூபாய்1180/- யை பழையனூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி
சிவசங்கரன் தனது சொந்த பணத்தை செலுத்தினார்.
திருவாலங்காடு மின் ஊழியர்கள் இன்று 06.10.2021ம் தேதி மின் மாற்றி மற்றும் நான்கு மின் கம்பங்கள் அமைக்கும் பணி ஓம் சக்தி நகரில் நடை பெற்று வருகிறது.
சுதாகர் கொடுத்த கோரிக்கை மனுவின் மீது மின்துறை அதிகாரி சீதாராமன் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பணியை விரைவாக செய்து முடித்தனர்.