chennireporters.com

கவர்னர் ஒரு அரசியல் கட்சி குறித்து தவறாக பேசியது ஜனநாயகத்திற்கு எதிரானது ஐயா பழ:நெடுமாறன் கண்டனம்.

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.ஆளுநர் பதவி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட உயர் பதவியாகும்.

ஆனால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தன் நிலையையும் உயர் மரபினையும் அறவே மறந்து அரசியல் கட்சி ஒன்றைக் குறித்து விமர்சனம் செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு இந்தியா முழுவதிலும் இயங்கி வருகிற சனநாயக அமைப்பாகும்.

இந்த அமைப்பு மிக ஆபத்தான இயக்கம் என தரம் தாழ்ந்த கருத்தினை கூறி இருப்பது அவர் வகிக்கும் பதவியின் பெருமையையே அடியோடு சீர்குலைத்து விட்டது.

ஒன்றிய அரசோ அல்லது மாநில அரசோ மேற்கண்ட அமைப்பு சட்ட விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

என இதுவரையில் எத்தகைய குற்றச்சாட்டையும் முன் வைக்கவில்ல.ஆனால் எல்லாவற்றிற்கும் மேலானவராக தன்னை கருதிக் கொண்டிருக்கும் ஆளுநர் ரவி தனது குற்றச்சாட்டினை திரும்பப் பெற வேண்டும் என வற்புறுத்துகிறேன்.

இந்தப் பேச்சு ஜனநாயகத்திற்கு எதிரானதாகும்.ஆளுநர் வகிக்கும் பதவியின் மரபை மீறிய செயலாகும். என இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அன்புள்ள
(பழ.நெடுமாறன்)

இதையும் படிங்க.!