சேலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ! சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம், திராவிடர் விடுதலைக் கழக இளைஞர் அணி, தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக சேலத்தில் 16.10.24 புதன் காலை 11.00 மணியளவில் சேலம் கருப்பூர் டோல்கேட் அருகில் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு எதிரில் பெரியார் பல்கலைக்கழக நிதியில் ஒன்றிய அரசின் விக்சிட் பாரத் பரப்புரை செய்ய வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டம் 11 மணியளவில் தொடங்கி ஆளுநரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கருப்புக்கொடி கழக கொடியுடன் கலந்து கொண்ட தோழர்கள் ஆளுநர் நடவடிக்கைகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில் காவல்துறையின் தடையை மீறி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் பங்கு பெற்ற தோழர்கள் அனைவரையும் காவல்துறை கைது செய்தது. அருகாமையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தோழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொருளாளர் சு.துரைசாமி , வெளியீட்டுச் செயலாளர் ராம இளங்கோவன் ,அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி, தலைமை குழு உறுப்பினர்கள் காவை ஈஸ்வரன்,சூலூர் பன்னீர்செல்வம், சக்திவேல், பரிமளராசன்,சேலம் (மே) மாவட்டத் தலைவர் சூரியகுமார்,சேலம் (மே)மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், சேலம் (கி)மாவட்ட செயலாளர் டேவிட்,மாவட்டத் தலைவர் கருப்பூர் சக்திவேல்,மாவட்ட அமைப்பாளர்கள் ஏற்காடு பெருமாள், நங்கவள்ளி சீ.அன்பு,சேலம் மாவட்ட இளைஞரணி செயலாளர் சு.பிரபாகரன், சேலம் மாநகர செயலாளர் ஆனந்தி,சேலம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திவ்யா,நாமக்கல் மாவட்ட தலைவர் சாமிநாதன் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் வாஞ்சிநாதன் சேலம் மாநகர அமைப்பாளர் மோ.பாலு,திருப்பூர் மாவட்ட தலைவர் முகில் ராசு,சேலம் மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஏற்காடு தேவப்பிரகாஷ் தமிழ்நாடு மாணவர்களாக மாவட்ட அமைப்பாளர் ச.நாகராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் கழகத்தின் மேட்டூர் நகர நிர்வாகிகள் தோழர்கள்,மாவட்ட மாநகர நிர்வாகிகள் திருப்பூர் ஈரோடு நாமக்கல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து நிர்வாகிகள் தோழர்கள் கலந்து கொண்டார்கள்.
