கோவை மாவட்டம் பேரூர் அருகே உள்ளது வடிவேலம்பாளையம்.இந்த கிராமத்தை சேர்ந்தவர் 86 வயது கமலாத்தாள் பாட்டி.அந்த கிராமத்தில் கடந்த 50 ஆண்டு காலமாக இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.
ஆரம்பத்தில் 50 பைசாவிற்கு இட்லி விற்பனை செய்து வந்த கமலாத்தாள்.தற்போது ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வருகிறார்ஒரு சாம்பார் ஒரு சுவையான சட்டினி தருகிறார்.
தன்னுடைய 86 வயதிலும் யாரிடமும் கையேந்தாமல் சொந்த உழைப்பில் வாழ வேண்டும் யாரையும் ஏமாற்றி வாழக் கூடாது உண்மையாக உழைத்தால் தான் உயர முடியும் என்று தன்னுடைய திடமான நம்பிக்கையால் வாழ்ந்து வருகிறார் கமலாத்தாள்.

பாட்டி விடியற்காலை ஐந்து மணிக்கு தனது வேலையைத் தொடங்கி மதியம் 12 மணி வரை இட்லி கடை செயல்படும் என்கிறார்.
தனது கிராமத்தில் இருந்து அருகில் உள்ள பல கிராமங்களில் இருக்கும் பொதுமக்கள் தன்னைப் பார்த்து விட்டு தன்னிடம் இட்லியும் சாப்பிட்டுவிட்டு செல்கின்றனர் என்கிறார்.
ஒரு நாள் கூட தனது இட்லி கடைக்கு லீவு விட்டதே இல்லை என்கிறார் பாட்டி கடைக்கு லீவு விட்டால் பல பேர் வயிறு பசிக்குமே பாவமில்லையா என்கிறார் தன்னுடைய உடைந்த குரலில்.
குறைந்த விலைக்கு இட்லி விற்பதற்கு காரணம் கிராம மக்களும் சில அரசியல் கட்சியினரும் எனக்கு உதவி செய்கின்றனர் சில நேரங்களில் அரிசியையும் பொது மக்கள் எனக்கு கொடுப்பார்கள்.
மளிகை சாமான்கள் மற்றும் காய்கறிகளை பணம் கொடுத்து தான் வாங்குகிறேன் என்கிறார் கமலாத்தாள் பாட்டி.
தண்டலுக்கு பணம் வாங்கி தான் பிழைப்பு நடத்துவதாக தெரிவிக்கிறார் பாட்டி தண்டல் காரருக்கு தினமும் வாங்கிய பணத்திற்கு நூறு ரூபாய் தண்டல் கட்டி விடுவதாக சொல்கிறார்.

ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பதினால் இன்னும் கூட என் கிராமத்தில் உள்ளவர்கள் இந்த வயதிலும் பிழைக்கத் தெரியாமல் வாழ்கிறார் என்று என்னைஏளனம்செய்கின்றனர்.எதைப் பற்றியும் நான் கவலைப்படுவதில்லை.
நேர்மையுடனும் உண்மையுடனும் வாழ்ந்தாலே போதும் என்கிறார்.சிறிய வயதில் நான் ராகி சோளம் என உடலுக்கு பலமான உணவுகளை சாப்பிட்ட தாலேலே 86 வயதிலும் சுறுசுறுப்புடன் இயங்குவதாக சொல்லுகிறார் பாட்டி .
கொரோனா காலத்திலும் வீட்டிலே இளைஞர்கள் மாணவர்கள் இளம் பெண்கள் முடங்கிக் கிடக்காமல் கமலாத்தாள் பாட்டியைப் பார்த்து சுயமாக தொழில் செய்ய வேண்டும் சுறுசுறுப்புடன் உழைக்க வேண்டும் என்கிற எண்ணம் உருவாக வேண்டும்.
கமலாத்தாள் பாட்டிதான் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு பெரிய வாழ்க்கை பாடம் என்றால் அது மிகையல்ல..