Chennai Reporters

ஐநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பச்சை மரகத லிங்கம் மீட்பு.

தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள சாமியப்பன் என்பவரிடம் பச்சை மரகத லிங்கம் இருப்பதாக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு தலைவர் ஜெயந்த் முரளி அவர்களுக்கு தகவல் கிடைத்தது.

அதனைத்தொடர்ந்து ஐ.ஜி தினகரன் தலைமையில் சிறப்பு படை அமைத்து தஞ்சாவூர் சென்று சாமியப்பன் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பச்சை மரகத லிங்கம் மீட்கப்பட்டது.

பச்சை மரகத லிங்கம்.

சாமியப்பனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.2016 ஆம் ஆண்டு நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள கோவிலில் இருந்து காணாமல் போன சிலை என்கிறார்கள் காவல்துறை யினர்.

மீட்கப்பட்ட இந்த சிலையின் மதிப்பு 500 கோடி எனவும் ஜெர்மாலஜிட் மூலம் இது மரகத சிலை என தீர்மானிக்கப்பட்டது.

கடந்த 2016 ம் ஆண்டு தர்மபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான கோவிலில் இருந்து சிலை திருடுபோனதாக ஆதீனத்தின் கண்காணிப்பாளர் சவுரி ராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!