chennireporters.com

சென்னை மெரீனாவில் பிக்பாக்கெட் திருடர்கள் கை வரிசை

சசிகலா ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.அப்போது அவரது ஆதரவாளர்களும் அதிமுகவை சேர்ந்த தொண்டர்களும் பெரும்பாலானோர் மெரீனா கடற்கரையில் திரண்டிருந்தனர்.

இதனை பயன்படுத்திக் கொண்ட பிக்பாக்கெட் திருடர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட தொண்டர்கள் இடத்தில் 93 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்துள்ளனர். மற்றும் பத்துக்கும் மேற்பட்ட செல் போன்களை திருடியுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெரம்பூரை சேர்ந்த சுப்ரமணி என்பவர் மெரினா கடற்கரையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பலர் இணையதளத்தின் மூலமும் புகார் அளித்துள்ளனர்.கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் அடித்த திருடர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க.!