திருவள்ளூர் மாவட்டம் ஆவடி செக் போஸ்டில் உள்ள தெற்காசியாவிலேயே 37 ஆண்டுகளாக ஓங்கி உயர்ந்து நிற்கும் மாவீரர் நிணைவுத்தூணில் வீரவணக்க நிகழ்ச்சி நடை பெற்றது.
சென்னை ஆவடியில் சென்னை திருவள்ளூர் நெடுஞ்சாலையில் காமராஜர் சிலை அருகில் அமைந்துள்ள மாவீரர் நிணைவுத்தூணில் 27.11.2021 சனிக்கிழமை மாலை 6.05 மணிக்கு ஈழப்போரில் உயிர்நீத்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் மலர் வணக்கமும் சுடர் வணக்கமும்இனம் காக்க தன் இன்னுயிரை தியாகம் செய்த ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒருநிமிடம் மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
தமிழர் விடுதலைக் கழகம் சார்பில் நடைபெற்ற இந்த மாவீரர் நாள் நிகழ்ச்சியில் தோழர் சுந்தர மூர்த்தி, ம.தி.மு.க. தொழிற்சங்க தலைவர் ஆவடி இரா.அந்திரி தாஸ்,
சோராஞ்சேரி ராஜன், மற்றும் தமிழ் உணர்வாளர்கள். பல அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாவீரர் நினைவு தூன் வண்ண மலர்கள் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.இந்த மாவீரர் நாள் திருவள்ளூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் நடை பெற்றது.
அது தவிர உலகெங்கிலும் வாழும் தமிழர்கள்தமிழ் ஆர்வலர்கள் தலைவர் பிரபாகரனின் புகழ்பாடும் நலம்விரும்பிகள் என உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மாவீரர் தினத்தை கொண்டாடினார்கள்.