முன்னாள் அமைச்சர் மணிகண்டனை வரும் 9ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.நடிகையின் ஆட்சேபனை மனுவை பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.சென்னைபெசன்ட்நகரில் வசித்து வருபவர் சாந்தினி.
நாடோடிகள் சினிமா படத்தில் நடித்துள்ளார். மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகார்மனுவில்,மணிகண்டன்என்னைதிருமணம்செய்வதாகசொன்னார் 5வருடங்கள் நானும், அவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம். 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்தேன் என்று கூறியுள்ளார்.
காவலர்கள் விசாரணைமணிகண்டனின் மிரட்டலின் பேரில் கருவை கலைத்தேன் இப்போது என்னை திருமணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என்று தெரிவித்து இருந்தார்.
சாந்தினி அளித்த புகாரின் பேரில் மணிகண்டன் மீது கொலை மிரட்டல், திருமணம் செய்வதாக ஏமாற்றுதல் போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பொய் புகார்இந்த புகாரை மணிகண்டன் மறுத்துள்ளார் நடிகை சாந்தினி யார், என்றே எனக்கு தெரியாது என்று கூறினார். பணம் பறிக்கும் கும்பல் பின்னணியில் இந்த பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.