chennireporters.com

ஊரடங்கு காலத்தில் உணவு வழங்கி வரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் கடைகள் மூடப்பட்டுள்ளது பொது மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது தினசரி உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தினசரி கூலி வேலைக்குச் செல்லும் மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது பெரும்பாலோனோர் சென்னையில் சாலையோரங்களிலும் ஆங்காங்கே முடங்கி கிடக்கின்றனர்.

இந்நிலையில் இவர்களுக்கு சென்னை சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜே. எச். மகேஷ் வழக்கறிஞர் என்பவர்,

ராமாபுரம், நந்தம்பாக்கம், செயின்ட் தாமஸ் மவுன்ட், கே.கே. நகர் போன்ற பகுதிகளில் தினந்தோறும் இருநூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்றாடம் உணவு பொட்டலமும் அரை லிட்டர் குடி தண்ணீர் பாட்டிலும் வழங்கிவருகிறார்.

இவருடன் இவரது நண்பர்கள் பிரசன்னகுமார், சுதாகர், மோகன் ஆகியோர் முக கவசம் மற்றும் கையுறை அணிந்து கொண்டு சாலையில் செல்வோர்கும் ஆங்காங்கே உணவின்றி தவித்திருக்கும் பொதுமக்களுக்கும் உணவு வழங்கி வருகின்றனர்.

கடந்த ஒரு வார காலமாக ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

இதையும் படிங்க.!