chennireporters.com

மாணவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய பள்ளி தலைமையாசிரியர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை யில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது.இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக திருபுரசுந்தரி என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் தனது மாணவர்களுக்கு மற்றும் துப்புரவு பணியாளர்கள் என 250 பேருக்கு தன்னுடைய சொந்த பணத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்.5 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சர்க்கரை,
ஒரு கிலோ உப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

நிவாரண பொருட்கள் வழங்கும் எம்.எல்.ஏ

தொடர்ந்து மாணவர்களின் சார்பில் அவர்களது பெற்றோர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.இந்த நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.இந்த விழாவில் கும்மிடிப்பூண்டி தி.மு.க. எம்.எல்.ஏ டி.ஜே. கோவிந்தராஜன் கலந்துகொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார் மற்றும் அவருடன் கல்வித்துறை அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.

விழாவில் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது தன்னுடைய சொந்த செலவில் தலைமையாசிரியர் திரிபுரசுந்தரி உதவி செய்ததை பொதுமக்கள் அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க.!