தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தன்னாட்சி பெற்ற கல்லூரிகளில் பல ஆண்டுகளாக பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு அரசு நிரந்தர பணி வழங்கப்படவில்லை. அவர்கள் தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்கிற செய்தி நமக்கு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இன்று நமது அலுவலகத்தின் உள்ள செய்தியாளர்கள் அனைவரையும் ரவுண்டப்பில் இறக்கி உண்மை நிலவரத்தை விசாரிக்க சொன்னோம் அப்போது நமக்கு கிடைத்த தகவல்கள்.
சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரி, பிரசிடென்சி கல்லூரி, நந்தனம் கல்லூரி, காயுதே மில்லத் மற்றும் சென்னையில் உள்ள 19 கல்லூரிகள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மகளிர் மற்றும் ஆடவர் கல்லூரிகளில் கடந்த 20 ஆண்டு காலமாக 3 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தொடங்கி தற்போது 25 ஆயிரம் வரை சம்பளமாக பெற்று வருகின்றனர்.
இவர்களை அரசு இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை அது மட்டும் இல்லாமல் மே மாதத்தில் வேலை வாங்கிக் கொண்டு சம்பளம் வழங்க மாட்டார்கள் அது தவிர இவர்களுக்கு எந்த விதமான விடுப்புகளோ வழங்கப்படுவதில்லை குறிப்பாக பேறுகால விடுப்பு, மருத்துவ விடுப்பு, பிஎப் போன்ற எந்த பணிக்கொடைகளும் வழங்கப்படுவதில்லை.
இருப்பினும் தங்களது குடும்பத்தின் நிலையை கண்டு அமைதியாக குறைந்த சம்பளத்திற்கே பணி செய்து வருகிறார்கள் என தெரியவந்தது. இது குறித்து நம்மிடம் பேசிய பிரசிடென்சி கல்லூரியின் கௌரவ விரிவுரையாளர் நாங்கள் கடந்த 20 ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறோம். 3 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தொடங்கிய எங்களது வாழ்க்கை தற்போது இருபத்தைந்து ஆயிரத்தில் வந்து நிற்கிறது.
ஆனால் அரசு பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஒரு விரிவுரையாளர் அல்லது பேராசிரியர் மொத்த சம்பளம் ஏறக்குறைய 1 1/2 லட்ச ரூபாயிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் வரை இருக்கிறது. யுஜிசி வரை முறைப்படி குறைந்தபட்சம் 57 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும். இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் யுஜிசி அடிப்படையில் எங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை குறிப்பாக அரசு விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் சரியான வகுப்பு எடுக்காமல் ஓபி அடித்து வருகிறார்கள். என்பது ஊர் அறிந்த விஷயம்.
குறிப்பாக பெண்கள் கல்லூரிகளில் அரசு விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் சம்பளம் வாங்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்களே தவிர மாணவர்களுக்கு நல்ல முறையில் பாடம் நடத்துவது இல்லை. அது தவிர தமிழக அரசின் எல்லா திட்டங்களையும் இந்த கௌரவ விரிவுரையாளர்கள் மட்டும் தான் அரசின் திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் எந்த வேலையும் செய்யாமல் எங்கள் மீது எல்லா வேலைகளையும் திணித்துவிட்டு அவர்கள் காலை சரியான நேரத்திற்கு வந்து வீட்டுக்கு போவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கடந்த 20 வருடங்களாக கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஒரு தேர்வு நடத்தப்பட்டு அதில் நிரந்தர பணி வழங்கலாம் என முடிவு செய்தது அது ஜெயலலிதாவின் ஆட்சி முடிவு அடையும் நேரத்தில் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் பொதுமக்கள் இளைஞர்கள் மாணவ மாணவிகள் எல்லாருக்கும் விடியல் தரும் என்று சொல்லும் இந்த அரசு டாக்டர் பட்டம் பெற்ற விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் என பல டிகிரிகளை முடித்தவர்கள் கௌரவ விரிவுரையாளர்களாக தமிழ்நாட்டில் மட்டும் 8000 பேர் உள்ளனர்.
ஆனால் இவர்களை இந்த அரசு பணி நிரந்தரம் இன்னும் செய்யவில்லை கடந்த ஐந்து நாட்களாக சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் எல்லா கல்லூரிகளிலும் இந்த கௌரவ விரிவுரையாளர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு கல்லூரிகளிலும் அரசு நிரந்தர பணியாளர்களாக ஐந்தாயிரம் பேர் வரை பணியாற்றி வருகின்றனர். ஆனால் அவர்கள் எல்லாம் மாணவர்களின் வாழ்வாதாரத்திற்காகவோ அல்லது எதிர்காலத்திற்காகவோ சிறப்பாக பணி செய்கிறார்களா என்றால் அது கேள்விக்குறிதான்.
ஆனால் கௌரவ விரிவுரையாளர்களாக இருக்கிற நாங்கள் மாணவர்களுடன் போட்டி போடுகிற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். குறைந்த சம்பளமாக 25 ஆயிரம் பெற்று வருகிறோம். எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது, குழந்தைகள் இருக்கிறார்கள். வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறோம் எங்களுடைய வாழ்க்கையை அரசு ஏன் நினைத்துப் பார்ப்பதில்லை என கேள்வி எழுப்புகின்றனர் சில பெண் விரிவுரையாளர்கள்.
எனவே ஏற்கனவே மே மாதம் பணியாற்றிய சம்பளத் தொகை ஏறக்குறைய ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு வருடம் இரண்டு வருடம் என சம்பள பாக்கியை நிலுவையில் வைத்துள்ளனர். அந்த சம்பளத்தை வழங்க வேண்டும். அது தவிர அரசு விரிவுரையாளர் மற்றும் பேராசிரியர்களுக்கு என்னென்ன அடிப்படை வசதிகள் உரிமைகள் வழங்கப்படுகிறதோ அவை அனைத்தையும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்கின்றனர்.
இன்றைக்கு தமிழக முழுவதும் மகளிர் உரிமைத் தொகையாக மொத்தம் 5000 ரூபாய் தலா ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் முதுகலை பட்டப்படிப்பு டாக்டர் பட்டம் முடித்துவிட்டு கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றுகிற எங்களுக்கு அரசு 25 ஆயிரம் சம்பளமாகவும் இதுவரை எந்தவித பணி நிரந்தரமோ மற்ற சலுகைகளோ வழங்காதது வேதனை தரும் விஷயம் என்கின்றனர் விரிவுரையாளர்கள்.
எங்களை தமிழக முதல்வர் தாயுள்ளத்தோடு ஒரு அப்பா மகனுக்கும் மகளுக்கும் என்ன செய்ய வேண்டும் என்பதை நினைக்கிறாரோ அந்த எண்ணத்தின் அடிப்படையில் எங்களுக்கு இந்த அரசு அனைத்து வசதிகளையும் செய்து தந்து எங்கள் வாழ்விலும் விடியலை ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் கவுரவ விரிவுரையாளர்கள். எனவே அரசு விரைவில் இந்த போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து ஒரு முடிவை எடுக்க வேண்டும்.
