chennireporters.com

அதானியை எதிர்த்தால் வீட்டுச்சிறை. நடப்பது அதானி ஆட்சியா? மதுரை நந்தினி கேள்வி?

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கத்தை எதிர்த்து மதுரை வழக்கறிஞர் நந்தினி நேற்று சென்னையில் போராட்டம் நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து அவரை மதுரையில் உள்ள வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை வழக்கறிஞர் நந்தினி தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

சென்னை காட்டுப்பள்ளியில் கடற்பகுதியை ஆக்கிரமித்து 6,110 ஏக்கரில் மோடியின் கூட்டாளி அதானி மிகப்பெரிய துறைமுகம் உருவாக்கி வருகிறார்.

சென்னை திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மிக மோசமான வெள்ள அபாயம், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு உட்பட பல பாதிப்புகளை உருவாக்கும் திட்டம்.

இது என்பதால் இந்த காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டத்துக்கு ஆரம்பம் முதலே பெரும் எதிர்ப்பு உள்ளது.

ஆனால் முந்தைய அதிமுக அரசு மோடியின் ஆணைக்கு கட்டுப்பட்டு அதானி துறைமுக திட்டத்துக்கு முழு ஆதரவாக செயல்பட்டது.

இப்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது இத்திட்டத்தை கடுமையாக் எதிர்த்தார்.

அதனால் ஸ்டாலின் முதல்வரானவுடன் காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்க திட்டத்தை ரத்து செய்வார் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக மு.க.ஸ்டாலின் அரசும் முந்தைய எடப்பாடி பழனிசாமி அரசைப் போலவே அதானிக்கு ஆதரவாக செயல்படுகிறது.

அதானி குழுமத்தோடு திமுக அரசு கடந்த ஜூலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.

இதனைக் கண்டித்தும் மக்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் மிகப் பெரிய கேடு விளைவிக்கும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் நேற்று (01.12.2021) சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை அருகில் நானும் எனது அப்பா ஆனந்தனும் நேற்று மதியம் 1 மணி அளவில் போராட்டம் நடத்தினோம்.

இதற்காக எங்களை கைது செய்த சென்னை மாநகர காவல்துறை திருவல்லிக்கேணி சமுதாயக் கூடத்தில் சிறை வைத்திருந்தனர்.

பின்னர் எங்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து நேற்று இரவு காவல் துறையினர் தங்களது வாகனம் மூலம் எழும்பூர் ரயில் நிலையம் அழைத்து வந்து எங்களை மதுரைக்கு அனுப்பினர்.இன்று காலை மதுரை வந்து சேர்ந்தோம்.

இந்நிலையில் மதுரையில் எங்கள் வீட்டின் முன்பு போலீசாரை நிறுத்தி எங்களை வீட்டுச் சிறையில் வைத்துள்ளது திமுக அரசின் காவல்துறை.

அதிமுக ஆட்சியைப் போலவே திமுக ஆட்சியிலும் எங்கள் மீது தொடர்ந்து காவல்துறை மூலம் அடக்குமுறை ஏவப்படுகிறது.

மக்களுக்காக நியாயமாக குரல் கொடுப்பதை தடுக்கும் விதத்தில் இது போன்ற அடக்குமுறை ஏவப்படுகிறது.

அதிமுக அரசைப் போலவே திமுக அரசும் பாசிச மோடி-RSS சொல்படி சர்வாதிகாரப் போக்கில் செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

என்று வழக்கறிஞர் மதுரையில் நந்தினி தனது முகநூல் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க.!