chennireporters.com

யூடியூப்பர் மதன் பேச்சுக்கு ஐ கோர்ட் நீதிபதி கண்டனம்.

டியூபர் மதனின் பேச்சுகள் காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு மோசமாக இருப்பதாக,

சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த பேச்சை கேட்டு விட்டு வந்து வாதிடும்படி முன்ஜாமின் வழக்கில் ஆஜரான வழக்கறிஞருக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

சிறுவர்கள் அதிகம் விரும்பி விளையாடும் ஆன்லைன் கேம் ‘பப்ஜி’ போன்ற விளையாட்
டுகளின் நுட்பத்தை தவறாக பயன்படுத்தி, டாக்சிக் மதன் 18+ என்னும் யூ- டியூப் பக்கத்தை ஆரம்பித்து ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூலம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

பப்ஜி விளையாட்டில் திறமையாக விளையாடும் மதன் ஒரு கட்டத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்த ஆரம்பித்ததால், அவரின் யூ- டியூப் பக்கத்துக்கு பார்வையாளர்கள் குவிந்தனர்.

7.8 லட்சம் சப்ஸ்கிரைப்பர்கள் அவர் பக்கத்தில் சேர்ந்தனர் சிறுவர், சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒரு கட்டத்தில் எல்லை மீறிய மதனின் யூ-டியூப் சேனல் மீது, சைபர் கிரைம் பிரிவு போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது.

மேலும், மாநிலக் குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு மற்றும் முதலமைச்சர் தனிப் பிரிவிலும் புகார்கள் கொடுக்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவினர் விசாரணைக்காக மதனை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பினர்.

இதையடுத்து பப்ஜி மதன் தலைமறைவு ஆனார்.அவர் மீது சிறுவர்களை தவறாக வழி நடத்தியது, பெண்களை ஆபாசமாக பேசியது,தடை செய்யப்பட்ட விளையாட்டை விளையாடியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமின் கேட்டு பப்ஜி மதன் என்கிற மதன்குமார்சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு நீதிபதி எம். தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மதன்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,சக தொழில் போட்டியாளர்கள் அளித்த புகாரில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டதாக யாரும் புகார் அளிக்கவில்லை என தெரிவித்தார்.

காவல்துறை தரப்பில், ஆபாச பேச்சுகள் மூலம் குழந்தைகளை கெடுக்கும் வகையிலும், பெண்களை கேவலப்படுத்தும் வகையிலும் மனுதாரர் பேசியுள்ளார்.

இவரது சேனலை சப்கிரைப் செய்தவர்களில் 30% பேர் பள்ளி மாணவ, மாணவிகள் ஆவர்.மதனின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை ஆரம்பகட்ட நிலையில் இருப்பதால், மதனுக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.

பின்னர், மதனின் யூ- டியூப் பக்கத்தில் அவர் பேசிய பேச்சுகளின் ஆடியோ பதிவு நீதிபதியிடம் சமர்பிக்கப்பட்டது.

இதை கேட்டதும் நீதிபதி அதிர்ச்சி அடைந்தார் பின்னர் நீதிபதி தண்டபாணி, யூ- டியூப் பதிவில் மதன் பேசியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா?

என அவருக்காக வாதிட்ட வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.ஆரம்பமே கேட்க முடியாத வகையில் இருக்கிறது.

அந்த பதிவுகளை கேட்டுவிட்டு நாளை வந்து அவருக்காக வாதிடுங்கள் என்று மனுதாரர் வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதி, முன் ஜாமின் மனு மீதான விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்துள்ளார்.

இதையும் படிங்க.!