chennireporters.com

கூண்டோடு டிரான்ஸ்பர் பண்ணிடுவேன்.போலீசை கதிகலங்க வைத்த கமிஷனர்.

தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி

பொதுமக்கள் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத போலீசை வாக்கி டாக்கியில் எச்சரித்த காவல் ஆணையர் ரவி அவர்கள் பொதுமக்களிடம் போலீசார் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

பள்ளிக்கரணையில் கணவர் தாக்கியதில் மனைவி காயம் அடைந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காத பள்ளிக்கரணை போலீசாரை தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி அவர்கள் மைக்கில் அழைத்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் நாம் விசாரித்தபோது தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படாத நிலையில் போலீசார் கடமையுடன் பணியாற்ற வேண்டும்.

அது மட்டுமில்லாமல் தனக்கு அளித்த பொறுப்பை சிறப்பாக செய்து முதல்வரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி விரும்புகிறார்.

அது தவிர தவறு நடந்து இருக்கும் பட்சத்தில் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.

அது தவிர நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.அது தவிர அவர்களை வேறு மாவட்டத்திற்கு மாற்றி விடுவதாகவும் கூறியுள்ளார்.

எந்த புகாராக இருந்தாலும் உடனடியாக(c.s.r) எனப்படும் புகார் மனு ஏற்பு சான்றிதழ் வழங்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.இந்த ஆடியோ போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க.!