chennireporters.com

# ias officers transferred;சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி உள்பட 18 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்.

சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி உள்பட 18 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 18 பேரை பணியிட மாற்றம் செய்து   தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்! முக்கிய முடிவுகள் பற்றி ஆலோசனை! | Tamil Nadu Cabinet Meeting Today Chaired By CM MK Stalin - Tamil Oneindia

தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு அரசில் உள்ள முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக சரிவர செயல்படாத அதிகாரிகளை டம்பி பதவிகளுக்கும், சிறப்பாக செயல்படும் அதிகாரிகள் உயர் பதவிக்கும் மாற்றம் செய்யப்படுவார்கள் என கூறப்பட்டது.

Shivdas Meena took charge as the new Chief Secretary of Tamil Nadu Government | தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றார் ..!

தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா.
மேலும், சட்டசபையில் மானிய கோரிக்கை முடிவடைந்துள்ள நிலையில், அரசு துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்த 18 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தற்போது அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இதன்படி பணியிடை மாற்றம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் விபரம் பின்வருமாறு:-

 

1. சுற்றுலா துறையின் கூடுதல் தலைமை செயலாளராக இருந்த மணிவாசன் ஐ.ஏ.எஸ் நீர்வளத்துறையின் கூடுதல் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2. பொதுப்பணி துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த சந்திரமோகன் ஐ.ஏ.எஸ் சுற்றுலா துறையின் முதன்மைச் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

3. கால்நடை பராமரிப்பு துறையின் கூடுதல் செயலாளராக இருந்த மங்கத் ராம் சர்மா ஐ.ஏ.எஸ் பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

4. ஊரக வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த செந்தில் குமார் ஐ.ஏ.எஸ் தற்போது சுற்றுச்சூழல் துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

5. சுற்றுச்சூழல் துறையில் செயலாளராக இருந்த சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத் துறை செயலாளராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

IAS Transfer: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்-தமிழக அரசு உத்தரவு-ias transfer ias transfer of officers tamil govt order - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்

6. மக்கள் நல்வாழ்வு துறை செயலாளராக இருந்த ககன் தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ், ஊரக வளர்ச்சித் துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

7. நெடுஞ்சாலை துறையின் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ் உயர்கல்வித்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Gagandeep Singh Bedi Ias,பேரிடர் மீட்பு நாயகன்... சுனாமி டூ சென்னை பெருவெள்ளம்... யார் இந்த ககன்தீப் சிங் பேடி IAS? - all you need to know about newly appointed health secretary of ...

ககன் தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ்

8. தமிழ்நாடு சாலை பாதுகாப்பு திட்ட இயக்குனராக இருந்த செல்வராஜ் ஐ.ஏ.எஸ், நெடுஞ்சாலை துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

9. தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் மேலால் இயக்குனராக இருந்த ஜான் லூயிஸ் ஐ.ஏ.எஸ், சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

10. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் செயலாளராக இருந்த விஜயலட்சுமி ஐ.ஏ.எஸ் இந்திய மருத்துவம் ஹோமியோபதி துறையின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

11. நில சீர்திருத்தத் துறையின் ஆணையராக இருந்த வெங்கடாசலம் ஐ.ஏ.எஸ், வரலாற்று ஆராய்ச்சி மற்றும் ஆவண காப்பகம் துறையின் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

12. தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய திட்ட இயக்குநராக இருந்த ஹரிஹரன் ஐ.ஏ.எஸ் நில சீர்திருத்த துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

13. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சிறப்பு செயலாளராக இருந்த லில்லி ஐ.ஏ.எஸ் போக்குவரத்துத் துறை சிறப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

14. நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த சந்தீப் சக்சேனா ஐ.ஏ.எஸ் தமிழ்நாடு காகித ஆலை மேலாண்மை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ககன்தீப் சிங் பேடி, சுப்ரியா சாகு... மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 18 பேர் இடமாற்றம்

15. தமிழ்நாடு காகித ஆலை மேலாண்மை இயக்குநராக இருந்த சாய் குமார் ஐ.ஏ.எஸ் தொழில் முதலீட்டுக் கழக மேலாண்மை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

16. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவராக இருந்த மகேஸ்வரன் ஐ.ஏ.எஸ் தமிழ்நாடு உப்புக் கழகம் மேலாண்மை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

17. தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்கநராக இருந்த வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ் அரசு கேபிள் டிவி மேலாண்மை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

18. நீர்பாசன மேலாண்மை மற்றும் நவீனமயமாக்கல் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஜவஹர் ஐ.ஏ.எஸ் சமூக சீர்த்திருத்தத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க.!