தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.தமிழக முதல்வராக தி.மு.க தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.அரசு உயர் பதவிகளில் உள்ள முக்கிய பொறுப்புகளை மாற்றியமைத்து வருகிறார்.
தலைமைச் செயலாளராக இறையன்பு நியமிக்கப்பட்டது உட்பட பல அதிரடி நடவடிக்கைகளை தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான மு. க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.இன்று பல ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.இன்று காலை தமிழகத்தில் 15 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யப்பட்டனர்.சென்னையில் முன்னாள் மாநகர காவல் ஆணையர் ஆக இருந்த மகேஷ்குமார் அகர்வால் தற்போது சென்னை குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி யாக தினகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.டி.என்.பி.எஸ்.சி செயலாளராக இருந்த நந்தகுமார் பள்ளிக் கல்வித் துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன் நுகர் பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார்.
தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலாளராக நீரஜ் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையராக ஆனந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.சிப்காட் மேலாண் இயக்குனர் குமரகுருபரன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.நுகர்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையராக ஆனந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை ஆணையராக நந்த குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.ஐ.பி.எஸ் அதிகாரிகளில் நெல்லை மாநகர காவல் ஆணையர் அன்பு தென்மண்டல நியமனம் செய்யப்பட்டுள்ளார்.மத்திய மண்டல ஐ.ஜி. தீபக் தாமோர் கோவை மாநகர ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.சென்னை போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு விசாரணை பிரிவு ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.