பொய் வழக்கு” பதிவு செய்த ஆய்வாளர், உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் மற்றும் திருவள்ளுவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு புலனாய்வு பிரிவின் உதவி ஆய்வாளர் ஆகிய இருவரையும், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு காவல் துறையினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்
மூன்று ஆண்டுகளுக்கு முன் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர், தனது நிறுவனத்தின் மேலாளர் சம்பந்தமாக கொடுத்த புகாரின் அடிப்படையில், தற்போது உத்திரமேரூர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் பரந்தாமன், திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு புலனாய்வு உதவி ஆய்வாளர் துளசி ஆகிய இருவரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பின்னர் அந்த மேலாளர், விசாரணை செய்யாமல் பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர் கொடுத்த பொய் புகாரின் பேரில், அவரிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, பொய்வழக்கு பதிவு செய்துள்ளனர் என இருவர் மீதும் வழக்கு தொடுத்துள்ளார். அது தற்போது நிரூபணம் ஆனதால், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உடனடியாக இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
காவல் நிலையங்களில் பணம் படைத்தவர்களின் செல்வாக்கால், ஏழைகள் பாதிக்கப்படுவது, இவர்களைப் போன்ற ஒருசில காவலர்களால் தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர்களை பணியிடை நீக்கம் செய்ததோடு, இல்லாமல் நிரந்தர பணிநீக்கம் செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவர்களைப் போன்ற காவல் துறையின் கருப்பு ஆடுகளை களையெடுக்கும் வகையில், துணிச்சலான முடிவுகளை எடுக்கும் காவல் துறை வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஐபிஎஸூக்கு நாற்காலி செய்தி இதழின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஐஜி அசரா கார்க் வடக்கு மண்டல ஐகியாக நியமிக்கப்பட்ட பிறகு லஞ்சம் வாங்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் மீது துணை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார் மேலும் பொது மக்களிடம் போலீசார் நன்மதிப்பை பெரும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் போலீசுக்கு அவர் பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் அவர்களை உடனே பணி நீக்கும் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் தீபாவளி பரிசு பொருட்கள் வாங்கிய ஐந்து சப் இன்ஸ்பெக்டர்கள் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டனர் இந்த நிலையில் பொய் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் இருவரையும் அதிரடியாக ஐஜி அசரா கார்க் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். ஐஜி அசரா கார் பெயர் சொன்னவுடன் லஞ்சம் வாங்கும் காக்கிகளுக்கு நடுக்கம் வந்து விட்டது தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி வரும் ஐஜி க்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பெருகி வருகின்றது.
சிங்கம் படத்தில் வரும் நடிகர் சூர்யாவை விட நிஜ சூர்யாவாக வடக்கு மண்டலத்தில் ஐஜி அசரா கார் விளங்கி வருகிறார். பத்திரிகையாளர்கள் தவறு செய்யும் போலீஸ் அதிகாரிகளை அவர்கள் குற்றச்சாட்டுகளை சுட்டிக் காட்டினால் அதன் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.