chennireporters.com

#income tax department seizes ; காங்கிரஸ் வேட்பாளர் வீட்டில் வருமான வரித்துறை திடீர் சோதனை 5 கோடி சிக்கியது.

#Pondicherry assembly election 2026.   #Special story Pondicherry election !!

பாண்டிச்சேரியில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு தினங்களில் அங்கு வாக்கு பதிவு நடக்க உள்ளது. இந்த நிலையில் பாண்டிச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் வீடு மற்றும் அலுவலகம் அவரது நண்பர் வீடு என பத்துக்கும் மேற்பட்ட இடத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.  அதில் கணக்கில் வராத  5 கோடி ரூபாய் அளவிற்கு பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

யார் இந்த ராஜேந்திரன்.?

பாண்டிச்சேரி அரசியல்வாதிகள் இடத்திலும், உளவுத்துறை போலீசார் இடத்திலும் விசாரித்த போது ராஜேந்திரன் பற்றி எந்தவித தகவல்களும் தெரியவில்லை. காரணம் ராஜேந்திரன் பாண்டிச்சேரியில் பிறப்பிடமாகக் கொண்டவர் இல்லை என்கின்றனர். அந்தப் பகுதி அரசியல்வாதிகள்.  அவர் லாஸ்பேட்டையில் வீடு வைத்துள்ளார்.  ராஜேந்திரன் பல்வேறு வியாபாரங்களை செய்து வருகிறார் அது மட்டும் தான் தெரியும் என்கிறார்கள்.

குறிப்பாக போதைப் பொருள் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் மற்றும் இயக்குனர் அமீர் ஆகியோர்வுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார்.

ஜாபர் சாதிக் கொடுக்கும் பணத்தில் இவர் திரைப்படங்களும் எடுத்துள்ளார்.  மேலும் பல்வேறு தொழில்களில்  மறைமுகமாக பினாமி பெயரில் பல வியபாரங்களில் பல கோடி ரூபாய் முதலீடு செய்து வருகிறார்.

இவருக்கு பூர்வீகம் எது?  எப்படி பாண்டிச்சேரியில் வந்து குடியேறினார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

காலங்காலமாக காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களுக்கு சீட்டு வழங்காத தலைமை திடீரென ராஜேந்திரனுக்கு பல கோடிகள் கைமாறிய பிறகு முத்தியால்பேட்டை தொகுதியில் வேட்பாளராக களமிறங்க அந்த கட்சி அனுமதி அளித்துள்ளது.ஜாஃபர் சாதிக்  வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது ராஜேந்திரன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. ராஜேந்திரன், அமீர், ஜாஃபர் சாதிக்கு உள்ளிட்டோர் ஒன்றாக இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முத்தியால்பேட்டை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராஜேந்திரன்.

அது தவிர அந்த சமயத்தில் ராஜேந்திரனிடம்  வருமானவரித்துறை அதிகாரிகள் பல முறை சோதனை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜேந்திரன் வருகையை விரும்பாத உள்ளூர் காங்கிரஸ் கட்சியினரும், திமுகவினரும் திட்டமிட்டே வருமான வரித்துறையினருக்கு தகவல் சொல்லி ராஜேந்திரன் வீட்டிலும், அவரது நண்பர்கள் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள் என்கிறார்கள் ராஜேந்திரன் தரப்பினர்.நண்பர் ஜாபர் சாதிக் மூலம் சினிமா துறையில் பல்வேறு இயக்குனர்கள் மூலம் திரைப்படம் எடுக்க பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதில் பல முக்கிய நடிகர்கள், இயக்குனர்கள், ஹீரோயின்களுக்கு  முன் பணமாக பல கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராஜேந்திரன், அமீர், ஜாஃபர் சாதிக்.

அதேபோல ஒரே நேரத்தில் சென்னையில் உள்ள அமீர் வீடு பாண்டிச்சேரியில் உள்ள முத்தியால்பேட்டை காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் வீடு அவரது நண்பர்கள் வீடு, அலுவலகம் என பல இடங்களில் அதிரடியாக ஒரே நேரத்தில் ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்புடன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர் இதனால் பாண்டிச்சேரி மற்றும் சென்னை கோடம்பாக்கம் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முத்தியால்பேட்டை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராஜேந்திரன்.

தட்டான்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள ராஜேந்திரன் அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.  20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதில் ராஜேந்திரன் அலுவலகம் மற்றும் அவரது நண்பர் வீட்டில் ஐந்து கோடி ரூபாய் அளவிற்கு பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல்  பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.ராஜேந்திரனின் சொத்து மதிப்பு ஏறக்குறைய பல கோடிகள் இருக்கும் என்கின்றனர் பாண்டிச்சேரி உளவுத்துறை அதிகாரிகள். இப்படி குறுக்கு வழியில் சம்பாதித்த பணத்தை அரசியலில் செலவு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ?  பூர்வீகம் எது ? என அவரைப்பற்றி எந்த தகவலும் தெரியாது என்கின்றனர் புதுவை அரசியல்வாதிகள். அவருடைய பின்னணி என்ன என்பது குறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் அதே போல வருமானவரித்துறை அதிகாரிகள் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தங்களது துறை உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த செய்தி குறித்து ராஜேந்திலன் தனது தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க.!