chennireporters.com

காரில் வந்தவருக்கு ஹெல்மெட் பைன் போட்ட இன்ஸ்பெக்டருக்கு1 லட்ச ரூபாய் அபராதம்.

காரில் வந்த வழக்கறிஞருக்கு ஹெல்மெட் அணியவில்லை என்று 100 ரூபாய் அபராதம் விதித்த இன்ஸ்பெக்டர் சிலைராஜன் என்பவருக்கு மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிமன்றம் 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தேனி உத்தமபாளையம் காவல் நிலையத்தில் தற்போது ஆய்வாளராக இருப்பவர் சிலைமணி. கடந்த 2018 ம் ஆண்டில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்த சமயத்தில் வாகனத்தணிக்கை செய்து கொண்டிருக்கும் போது அந்த வழியாக வெள்ளையாபுரத்திற்கு காரில் வந்த சிவன்ராஜ் என்ற வழக்கறிஞரின் காரை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்து கொண்டு இருந்தார்.

அப்பொழுது ஏற்பட்ட வாக்குவாதத்தில் காரில் பயணித்த முகமது யாசிர் என்பவரை ஆய்வாளர் சிலைமணி, தாக்கினார் பின்னர் 2000 ரூபாய் லஞ்சம் ஆக பெற்றுக்கொண்டு ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறியதாக 100 ரூபாய் அபராத ரசீதை வழங்கினார்.

இதையடுத்து வழக்கறிஞர் சிவன் ராஜ் மாநில மனித உரிமை ஆணையத்தில் இதுகுறித்து வழக்கு தாக்கல் செய்தார். வழக்கினை விசாரித்த நீதிபதி சித்தரஞ்சன் மோகன் தாஸ் தற்பொழுது உத்தமபாளையம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணி பணியாற்றிக் கொண்டிருக்கும் சிலைமணிக்கு 1 லட்ச ரூபாய் அபராதமும் மேலும் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு பரிந்துரை செய்தார்.

இதையும் படிங்க.!