chennireporters.com

ஆப்கானிஸ்தான் கடும் உறைபனியால் 70 பேர் பலி 140 பேர் காயம்.

ஆப்கானிஸ்தானில் கடும் உறைபனியால் 70 பேர் பரிதாப பலி: 140 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

காபூல்: ஆப்கானிஸ்தானில் கடும் உறைபனியால் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 140 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு உள்ளது. குறிப்பாக காபூல் உள்ளிட்ட இதர மாநிலங்களில் வெப்பநிலை கடுமையாக சரிந்துள்ளது. கோர் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 33 டிகிரியாக உள்ளது.

எங்கு பார்த்தாலும் பனிக்கட்டியாக தென்படுகிறது. இந்த உறைபனியில் உறைந்து 70 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் குழந்தைகள், பெண்கள் உள்பட 140 பேர் கார்பன் மோனாக்சைடு பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 8 நாட்களில் 70 ஆயிரம் கால்நடைகளும் உயிரிழந்துள்ளது.

இதுகுறித்து ஆப்கான் வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ‘இந்த குளிர்காலம் சமீப காலங்களில் மிகவும் குளிர்ச்சியானது என்றும் இந்த குளிர் அலை மேலும் 1 வாரம் நீடிக்கும்’ என்றும் தெரிவித்துள்ளது.

இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது….

இதையும் படிங்க.!