chennireporters.com

60 வயதாகியும் ஓய்வு பெறாத அரசு பஸ் டிரைவர்.

திருவள்ளூர் போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிபவர் பாஸ்கரன் இவர் 60 வயது முடிந்து ஆறு மாதங்கள் ஆகியும் திருவள்ளூர் பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இது தொடர்பாக நாம் களத்தில் இறங்கி விசாரித்தோம்.

 

திருவள்ளூர் மீரா தியேட்டர் அருகே வசித்து வருபவர் பாஸ்கரன் ஓட்டுநர் இவர் திருவள்ளூர் பணிமனையில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

இவர் தற்போது 60 வயதை கடந்து பணியாற்றி வருகிறார் என்கிற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள்.  இது தொடர்பாக அவர்கள் நம்மிடத்தில் 15. 5. 1962 பாஸ்கரன் பிறந்த தேதி  இதுதான் அவருடைய ஓட்டுநர் உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த ஓட்டுனர் உரிமம் 16.6.1982ல் எடுக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 வயதிலிருந்து 60 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் பாஸ்கருக்கு 60 வயது முடிந்து சுமார் 6 மாத காலமாகிறது. ஆனால் இதுவரை பாஸ்கரன் பணி ஓய்வு பெறவில்லை.

 

காரணம் திருவள்ளூர் பணிமனையின் பொது மேலாளர் நெடுஞ்செழியன் அவருக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாஸ்கரன் வேலைக்கு சேர்ந்த போது கொடுக்கப்பட்ட பள்ளி கல்வி சான்றிதழ் போலியானதா அல்லது அதில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதி போலியானதா?

இல்லை ஓட்டுநர் உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதி உண்மையானதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.  இது குறித்து நாம் திருவள்ளூர் பணிமனையின் பொது மேலாளர் அவர்களிடத்தில் கேள்வி எழுப்பினோம்.

 

அவர் இது குறித்து எந்த பதிலையும் நமக்கு தெரிவிக்கவில்லை எனவே போலியான பள்ளி சான்றிதழ் கொடுத்து தான் பாஸ்கரன் பணியில் சேர்ந்து இருப்பார் என்கிற சந்தேகம் எழுந்து வருகிறது.

இதுகுறித்து பொது மேலாளர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள். இல்லையென்றால் இது குறித்து போராட்டம் நடத்தவும் தமிழக முதல்வர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பி உள்ளதாகவும் சொல்லுகிறார்கள்.

உண்மை என்ன என்பதை திருவள்ளூர் அரசு பணிமனையின் பொது மேலாளர் நெடுஞ்செழியன் தான் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க.!