chennireporters.com

பணி நேரத்தில் சூதாடும் அரசு டிரைவர். நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்.

திருவள்ளூர் போக்குவரத்து பணிமனையில் ஓட்டுனராக பணிபுரிபவர் பாஸ்கரன் இவருக்கு 61 வயது முடிந்து 6 மாதங்கள் ஆகிறது.  இவர் தொடர்ந்து அரசு ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.  என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இது தொடர்பாக நாம் கடந்த நவம்பர் மாதம் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

அந்த செய்தி குறித்து விசாரித்த அதிகாரிகள் ஓட்டுனர் உரிமத்தில் ஏற்பட்ட கோளாறு என்று விஷயத்தை மூடி மறைத்து விட்டனர். இந்த நிலையில் தினமும் வேலைக்கு வரும் பாஸ்கரன் வருகைப்பதிவேட்டில் விரல் ரேகை வைத்து விட்டு ஓப்பி அடித்து வருகிறார் என்கிறார்கள் அதிமுக தொழிற்சங்கத்தினர்.

பாஸ்கரன் வேலை நேரத்தில் பணிக்கு வராமல் சூதாட்ட கிளப்பில் சூது விளையாடிக் கொண்டிருக்கும் திமுக ஓட்டுநரை கண்டு திருவள்ளூர் பணிமனை பிரான்ச் மேனேஜர் அஞ்சி நடுங்குகிறார் என்கிறார்கள் சக ஊழியர்கள். இவர் ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கியவர் வயது முதிர்ந்து ஏற்கனவே ரிட்டயர்மென்ட் வயது கடந்தும் அவர் அரசு பணி செய்து வருகிறார் போலியான சர்டிபிகேட்டுகளை கொடுத்து பணியாற்றி வருகிறார்.

ஏற்கனவே இவர் மீது அந்த குற்றச்சாட்டு நிலுவையில் உள்ளது.  இந்த நிலையில் திமுக விஐபி ஒருவரின் சிபாரிசின் பேரில் அவருக்கு திருவள்ளூர் போக்குவரத்து பணிமனை மேலாளர் பணி வழங்கி இருக்கிறார் என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள் திமுக தொழிற்சங்க நிர்வாகத்தினர்.

அது மட்டும் இல்லாமல் பணி நேரத்திற்கு அலுவலகத்திற்கு வந்து கைரேகையை மட்டும் வைத்துவிட்டு பணிமனையில் உள்ள உதவி பொறியாளர் வெங்கடேசனிடம் சொல்லிவிட்டு இவர் திருவள்ளூரில் உள்ள கலைச்சங்க மைதானம் என்கிற இடத்தில் சூதாட்டம் நடைபெற்று வருகிறது. அந்த இடத்திற்கு சூதாட சென்று விடுகிறார். பிரேக் டவுன் எதாவது இருந்தால் ஏ.ஈ .வெங்கடேசன் கவனிப்பார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 27 ம் தேதி  திருவள்ளூர் பணிமனைக்கு சொந்தமான பேருந்து ஒன்று திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் பஞ்சராகி நின்று விட்டது.  அதை சரி செய்ய அலுவலகத்தில் இருந்த  உதவி பொறியாளர் வெங்கடேசன்  பாஸ்கரனுக்கு பதிலாக எடுத்து கொண்டே பழுதாகி நின்ற பேருந்தை சரி செய்து விட்டு மீண்டும் பணிமனைக்கு வந்தார். பணியில் இருக்கவேண்டிய அதாவது டே பார்கிங்கில் இருக்கவேண்டிய பாஸ்கரன் கலை சங்க மைதானத்தில் சூதாடிக்கொண்டிருக்கிறார்.

 

பாஸ்கரனுக்கு பயந்து அதிகாரிகள் வேலை செய்வது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி கேட்கிறார்கள் சக ஊழியர்கள். பதில் சொல்லாமல் அதிகாரிகள்  திணறிவருகின்றனர்.  ஒரு  பிராடு ஓட்டுனருக்கு அதிகாரிகள் அஞ்சி நடுங்குவதற்க்கான காரணம் தெரியவில்லை என்கின்றனர் அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள்.

மாதம் அவர் அரசை ஏமாற்றி வாங்கும் சம்பளத்தில் ஏ.ஈ. வெங்கடேசனுக்கும்  மற்ற அதிகாரிகளுக்கும் பங்கு கொடுப்பதாக சொல்லுகிறார்கள் எதிர் கட்சி சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள்.  விழுப்புரம் கோட்ட மேலாளர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் வயதாகி வீட்டுக்குச் செல்லாமல் போலியான ஆவணங்களை கொடுத்து மீண்டும் பணி செய்து வருவது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுதே வேலைக்கு வராமல் சூதாடி வருவதற்கு வக்காலத்து வாங்கும் அதிகாரிகள் நிலையைக் கண்டு அங்குள்ள ஊழியர்கள் கொதித்து எழுந்துள்ளனர்.  டி.எம். தர்  பி.எம். பாஸ்கரன் கை கட்டி வாய் மூடி இருப்பதள்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. பிராடு ஓட்டுநர் பாஸ்கரன் பற்றியும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் பற்றி வழக்கு தொடுக்கப்போகிறார்களாம் சில ஊழியர்கள். 

இதையும் படிங்க.!