chennireporters.com

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பாக மக்கள் புரட்சி ஏற்பட்டுள்ளது.

பால் உணவு பெட்ரோல் என அத்தியாவசிய பொருட்களுக்கு
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று இலங்கையில் பேரழிச்சி ஏற்பட்டு பொதுமக்கள் ஒன்று திரண்டு அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் அதிபர் மாளிகையில் உள்ளே பல சொகுசு கார்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிபர் ரன்னில் விக்ரம் சிங் வீட்டுக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அந்த சொகுசு மாலையில் இருந்த மாளிகையில் இருந்த நீச்சல் குளத்தில் குளித்தனர்.

அவர் வீட்டை அடித்து உடைத்து தீ வைத்தனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த புரட்சி குறித்து தமிழர் தேசிய முன்னணி தலைவர் நெடுமாறன் அறிக்கை விடுத்துள்ளார்.

சிங்கள மக்களின் புரட்சியின் விளைவாக ராஜபக்சே சகோதரர்கள் பதவியை விட்டு விலகியது மட்டுமல்ல நாட்டை விட்டு ஓட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

 

இனவெறியை மட்டுமே கோட்பாடாகக் கொண்டு செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் கதி இதுதான் என்பது வரலாற்றில் மீண்டும் பதிவாகியுள்ளது.

 

மக்கள் புரட்சியை ஒடுக்க சிங்கள இராணுவம் முன்வரவில்லை என்பது சிந்திக்கத் தக்கதாகும்.சிங்கள இராணுவத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்கள் இராஜபக்சேவால் நியமிக்கப்பட்டவர்களே.அப்படி இருந்தும் இராணுவம் சும்மா இருந்தது ஏன் ? இராஜபக்சேக்களின் தந்திரமா ? என்ற கேள்வி எழாமல் இல்லை.

இராணுவம் ஆட்சியை கைப்பற்றும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதற்குப் பின்னனியில் சீனா இருக்கக்கூடும் என்பதை புறக்கணித்து ஒதுக்க முடியவில்லை.

எதுவாக இருந்தாலும் சிங்கள மக்கள் இனவெறியை கைவிட்டு விட்டு ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு பரிகாரம் காண முன்வர வேண்டும்.அவர்களுக்கு சம உரிமை அளிக்கவும் அவர்களின் உணர்வுகளை மதிக்கவும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இலங்கை – கொழும்புவில் ரணில் விக்கிரமசிங்கே இல்லத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

ரணில் வீட்டிற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பொருட்களை உடைத்து தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

 

இதையும் படிங்க.!