தமிழக வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறையின் செயலாளராக பணியாற்றி வருபவர் ஜோதி நிர்மலா சாமி ஐஏஎஸ் அவர்கள் மிகச் சிறந்த பெண்ணியவாதி பெண்மையின் பெருமை பேசும் பல புத்தகங்களை எழுதியுள்ளார் ஜோதி நிர்மலா சாமி ஐஏஎஸ்.
மகளிர் தினமான இன்று அவர் ‘வலிமையானவள் பெண் ‘என்கிற தலைப்பில் ஐஏஎஸ் அதிகாரி ஜோதி நிர்மலா சாமி எழுதிய கவிதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமூகத்தில் நலிந்து கிடக்கிற வறுமையின் நிலையில் உள்ள பெண்களுக்கு பல்வேறு உதவிகளை செய்திருக்கிறார் ஜோதி நிர்மலா சாமி. சப் கலெக்டராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய ஜோதி நிர்மலா சாமி தன் பணியின் மீது இருந்த அர்ப்பணிப்பின் காரணமாக ஐ ஏஎஸ் அதிகாரியாக இன்று தலைசிறந்து நிற்கிறார்.
பெண்மை ஒரு வரம் என்ற புத்தகத்தையும் இன்னும் சில புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.
பெண்…….உலகத்தின் இயக்கி…… உண்மையின் ஊக்கி……. மனிதத்தின் வளர்விசை…….அவள் மாறாத அன்பு இசை…….
மனிதகுலம் தழைக்க மக்கட்பேறு செழிக்க இனியதொரு மென்மையை அவளுள் இயற்கையையும் வைத்தது….. பணிந்திருக்க வேண்டும் இவள் பலவீனமானவள் என தணியாத ஆதிக்கம் தகைவிலா கொடுமையாம்.
அறிவும் சமநிலை ஆற்றலும் சமநிலை கல்வியையும் சமநிலை காரியமும் சமநிலை என்னில் இந்நிலை இங்கே இயல்பாய் தொடர்களில் எங்கிருந்து வந்தது ஏற்றத்தாழ்வு இழிநிலை……
அதே முயற்சி உண்டு அதே மூளையும் உண்டு அதே உழைப்பு உண்டு அதே ஊதியமும் உண்டு……. எனில் எதனால் இவ்விடத்தே இருப்பால் வேற்றுமையுண்டு….
தொலைவிலிருந்தே சாய்க்க முடியும் துல்லிய கருவி கண்டு….. பலத்தினால் வீம்பு காட்டும் பழக்கத்திற்கு முடிவு உண்டு…..
பெண்ணாகப் பிறந்ததால் பெறாதது ஏதுவுமில்லை… அவள் பொன்னான கைகள் படாது ஏதும் மிளிர்வதில்லை…. கண்ணாகப் போற்றுவதும் நேர்மையின்றி வேறில்லை…. கடமைக்கும் உரிமைக்கும் அவளிடத்தோ சமரசமில்லை……..
பெண்ணுடலில் இயற்கை வைக்கும் வலிமை பின்னம் நேர்மையின் சக்தியால் நிரவல் பெறுகிறது…… நேர்மையே பழகிக் கொண்டும் நித்தமும் நிகழ்வாழ்வில் தீரமிக்க பெண்களாய் திகழ்ந்தே மகிழ்ந்திடுவோம்……