chennireporters.com

இந்து பண்டிகைக்கு எதிராக செயல்படுகிறாரா? ஆவடி பத்திரப்பதிவாளர் மல்லிகேஸ்வரி.

ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆயுத பூஜை போட மறுக்கும் பதிவாளரை கண்டித்து அலுவலக ஊழியர்கள் அவரை கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஆவடி பத்திரப்பதிவு அலுவலராக பணியாற்றி வருபவர் மல்லிகேஸ்வரி. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இதே இடத்தில் பணியாற்றி வருகிறார். இவர் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை ஐஜி ஆகியோருக்கு அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிறார்.  இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் இதுவரை  இவர் மீது துறை ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

ஆவடி சுற்றியுள்ள வீராபுரம், மோரை ,திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர் ஆகிய பகுதிகளில் பல முறைகேடான இடங்களை முறையான ஆவணங்கள் இல்லாமல் பத்திர பதிவு செய்துள்ளார்  என்று இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

 

ஐஜி சிவன்  அருள்

இது தொடர்பாக பத்திரப்பதிவுத்துறை ஐஜி சிவன்  அருள் அவர்களுக்கு பல புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன.  ஆனால் அந்த புகார்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  மூன்றை ஆண்டுகள் கடந்து பணியாற்றி வருவதால் அவரை பணிமாற்றமும் செய்யவில்லை துறை ரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் கிருத்துவ மதம் பெந்த கோஸ்ட்   பிரிவை சேர்ந்த மல்லிகேஸ்வரி  இந்த ஆயுத பூஜைக்கு அலுவலகத்தில் பூஜை போட வில்லை என்று அலுவலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இது குறித்து ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள்  சிலர் சென்று மல்லிகேஸ்வரியிடம் மேடம்   ஆயுத பூஜை போட்டு விடலாமா என்று கேட்டதற்கு பதில் ஏதும் சொல்லாமல் நான் ஏன் பூஜை போட வேண்டும் அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை என்று கோபமாக பதில் சொன்னாராம்.

இதனால் மேடம் பூஜை போட அனுமதிக்க மாட்டார் என்று  தெரிந்துகொண்ட ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலக உதவியாளர் யுவராஜ் என்பவர் தன்னுடைய சொந்த பணத்தை வைத்து (இன்று) அதாவது 11.10.2022 செவ்வாய் கிழமை மாலை ஒப்புக்கு ஒரு சிறிய பூஜை போட்டுவிட்டு சூரை தேங்காய் ஒன்றை உடைத்து விட்டு சோகத்துடன் வீட்டுக்கு சென்றாராம். இது குறித்து நீண்ட நாள் பணியாற்றி வரும் ஆவண எழுத்தர்கள் சிலர் நம்மிடம் கடந்த வருடம் கூட மல்லிகேஸ்வரி  மேடம் பூஜை போட்டார் இந்த வருடம் ஏன் போடவில்லை என்று தெரியவில்லை.

திமுக ஆட்சி வந்ததால் இந்து மத பண்டிகையான ஆயுத பூஜையை வெறுக்கிறார் என்று தோன்றுகிறது என்கிறார்கள். ஏற்கனவே இருந்த பத்திரப்பதிவாளர்கள் பலர் ரியல் எஸ்டேட் அதிபர்கள், பில்டிங் காண்ட்ராக்டர்கள் ஆகியோரிடம் பூஜை போட போகிறோம் உங்களால் முடிந்தது செய்யுங்கள் என்று சொல்வார்கள் அவர்கள் வெள்ளி காயின் அல்லது சில்வர் பாத்திரமோ  அன்பளிப்பாக கொடுப்பார்கள்.

 

அதனைத்தொடர்ந்து பூஜை சிறப்பாக நடக்கும்.  பின்னர் பூஜை போடப்பட்டு ஊழியர்களுக்கு  இனிப்பு பொட்டலங்கள், பழங்கள், பொறி என தடபுடலாக கொடுத்த பின்பு  சந்தோஷமாக வாங்கி செல்வார்கள்.  ஆனால் இந்த அம்மா ரியல் எஸ்டேட் அதிபர்கள்,  பில்டிங் காண்ட்ராக்டர்கள் என முக்கிய விஐபிகளிடம் ஆயுத பூஜைக்கான வசூல் வேட்டை மட்டும் நடத்திவிட்டு ஊழியர்களுக்கு நாமத்தைப் போட்டுவிட்டார் என்கிறார்கள் ஊழியர்கள் சிலர்.

மல்லிகேஸ்வரி கடந்த கிறிஸ்மஸ் தினத்தன்று மேற்படி விஐபிகளிடம் பெரிய வசூல் வேட்டை நடத்தி இனிப்பு பொட்டலங்கள் மட்டும் சுமார் 80 கிலோ வரை உள்ள பெட்டிகளை அவரது காரில் தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றார் என்கிறார்கள் ஊழியர்கள் சிலர். ஆனால் இந்த முறை ஆயுத பூஜை விழாவை நடத்த சம்மதிக்கவும் இல்லை அனுமதிக்கவும் இல்லை.  ஆனால் வசூல் வேட்டை மட்டும் சிறப்பாக முடிந்தது என்கிறார்கள்.

இன்னும் சில ஊழியர்கள் எப்போதுதான் மேடம்  உணரப்போகிறாரோ என்று சலிப்புடன் சொல்கிறார்கள். இவர் ஆயுத பூஜை விழாவை கொண்டாடாமல் புறக்கணித்ததற்கு பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு மல்லிகேஸ்வரி பற்றி பெரிய புகார் கடிதமே அனுப்பியுள்ளனராம்  பாஜகவினர்.

ஆயுத பூஜை விழா தொடர்பாக பதிவாளர்  மல்லிகேஸ்வரி.அவர்களை தொடர்பு கொண்டு அவர் கருத்தை அறிய முயன்றோம் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை இது குறித்து அவர் கருத்தை சொன்னால் நாம் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க.!