நடிகர் வடிவேலின் தாயார் மரணம்.

January 19, 2023

By இரா. தேவேந்திரன்.

 

மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா (87) நேற்று இரவு உடல்நல குறைவால் காலமானார்.

 

வயது முதிர்வு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது இந்த சூழலில் சரோஜினி அம்மாள் திடீரென இன்று இரவு காலமானார்.

மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் திடீரென மரணமடைந்தார். சரோஜினி அம்மாவின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மு.க. அழகிரி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வடிவேலுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.

Share:

இரா. தேவேந்திரன்.

January 19, 2023

Leave a Comment