chennireporters.com

ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் முறைகேடு ஊழியர்கள் பணி நீக்கம். அதிமுக ஆட்சியில் முறைகேடு .

 

ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில்  சமையலர் – காப்பாளர் நியமனத்தில் அதிமுக ஆட்சியில் முறைகேடுநடந்துள்ளது. இது குறித்து – 41 மாவட்ட அலுவலர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிமுக ஆட்சியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜலட்சுமி, முறைகேடாக சமையலர், காப்பாளர் பணி நியமனம் செய்தார்.  தற்போது அந்த பிரச்னை பூதாகரமாகியிருக்கிறது. முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதோடு, துறை முழுவதும் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவது, இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது .

எஸ்.சி., எஸ்.டி. நலத்துறையில் சமையலர் – காப்பாளர் நியமனத்தில் அதிமுக ஆட்சியில் முறைகேடு – 41 மாவட்ட அலுவலர்களிடம் விசாரணைநடை பெற்று வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜலட்சுமி.

 

அதிமுக ஆட்சியின் கடைசி காலத்தில், தமிழகம் முழுவதும் சமையலர் மற்றும் காப்பாளர் நியமனம் நடைபெற்றது. அதில், நேர்மையாக நேர்முகத் தேர்வு வைத்து இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் நடைபெறவில்லை என சொல்லப்பட்டது. வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், வேலைக்கான தகுதியை விட அதிகம் படித்தவர்கள் என முற்றிலும் முறைகேடான முறையில் பணி நியமனம் நடைபெற்றிருக்கிறது.

 

முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமியும், அவரது உதவியாளர் ரவியும் வேலைக்கு விண்ணப்பித்த தகுதியானவர்களை நிராகரித்துவிட்டு, சம்மந்தமே இல்லாத நபர்களிடம் லட்சக் கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு, தமிழகம் முழுவது பல்வேறு மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

இது குறித்து முறையாக வேலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தொடர்புடைய உயர் அதிகாரிகளுக்கு தக்க ஆதாரத்துடன் புகார் அனுப்பி வைத்தனர். அதற்கும் ஒருபடி மேலே போய், அப்போதைய முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமிக்கும் புகார் கடிதங்களை அனுப்பிவைத்தனர். ஆனால், கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை யாரும் அந்த புகார்கள் மீது செவிசாய்க்கவில்லை. அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, கண்டும் காணாமல் இருந்துவிட்டார்.

இந்த பணி நியமனங்களின் மூலம் கோடிக் கணக்கில் கொள்ளையடித்த முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை அனைவருக்கும் பங்கு பிரித்து கொடுத்தது போக… திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பினாமிகளின் பெயர்களில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் ஆதிதிராவிடர் நலத்துறையில் நடைபெற்ற பணி நியமன முறைகேடுகள் குறித்து மாவட்டம் தோறும் உயர் அதிகாரிகள் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அனைத்து மாவட்டங்களிலுமே முறையற்ற பணி நியமனம் நடைபெற்றுள்ளது இதன் மூலம் தெரியவந்திருக்கிறது. வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள், தகுதியற்றவர்கள், ஜாதி அடிப்படையில் இல்லாமல் முறையற்ற நியமனம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முறையற்ற நியமனம் செய்யப்பட்ட நபர்களை பணி நீக்கம் செய்ய, மாநில ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் முதற்கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் ஐந்து சமையலர்களின் பணி நியமனத்தை ரத்து செய்வதாக தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ஆனந்த் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேபோன்று அனைத்து மாவட்டங்களிலும் முறைகேடுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து மாவட்ட அலுவலர்களும் பெரும் பீதியிலும் அச்சத்திலும் இருக்கின்றனர். அனைத்து முறைகேடுகளுக்கும் ஊழல்களுக்கும் தலைமை தாங்கி நடத்திய ஆதிதிராவிடர் நலத்துறை முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, உதவியாளர் ரவி ஆகியோர் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது

இதையும் படிங்க.!