தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேரளா சென்றுள்ளார்.
தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற முதல்வரை அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் வரவேற்றார்.
அதன் பிறகு கேரள அமைச்சர்கள் கே. ராஜன், ஜி.ஆர்; அணில், வி.சிவன் குட்டி வரவேற்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்சாரத் திருத்த சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும்;
அடுத்த தென் மண்டல கவுன்சில் கூட்டத்தை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்றும் ;மு .க .ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
அது தவிர மொழி கலாச்சாரம் நீண்ட வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் தென்மாநிலங்கள் நெருங்கிய தொடர்பு கொண்டவை என்றும்;
தென் மாநில மொழிகள் அனைத்தும் திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்தவை முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.