chennireporters.com

நடிகர் விஜயை புறகணிக்கும் அனிருத். கடுப்பான விஜய்

இசையமைப்பாளர் அனிருத் ‘லியோ’ வெற்றி விழாவை புறக்கணித்ததற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படத்தின் வெற்றி விழா  நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார் என சொல்லப்பட்ட நிலையில், விஜய் மட்டுமே சிறப்பு விருந்தினர் என படக்குழு உறுதி செய்தது.

 

மேலும், ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன ‘காகம்-கழுகு’ குட்டிக்கதைக்கு நடிகர் விஜய், ‘ஆசைப்படுவதில் தவறில்லை. பெரிதாக ஆசைப்படலாம்’ எனச் சொல்லி பதிலடி கொடுத்ததோடு ‘ஒரே சூப்பர் ஸ்டார்தான்’ என அந்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.


அதேபோல, ‘லியோ’ படத்தின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம் அனிருத்தின் இசை. அவரது இசையும் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டானது. ‘ஜெயிலர்’ பட வெற்றிவிழாவில் கூட ரஜினிகாந்த் அனிருத்தின் இசையால்தான் படம் தப்பித்தது என பேசியிருந்தார். இந்த நிலையில், ‘லியோ’ வெற்றி விழாவில் அனிருத் பங்கேற்கவில்லை. இதற்குக் காரணம் அவரிடம் அடுத்தடுத்த பெரிய படங்கள் கைவசம் உள்ளது. இந்த பணிகள் காரணமாகவே அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால், அனிருத் மீது விஜய் கடுப்பில் இருக்கிறார் எனத் தகவல் வெளியாக அதனை விஜய் தரப்பு மறுத்திருக்கிறது.

தமிழக அரசியல் களத்தில் விஜயின் வரவை ரஜினி தரப்பு விரும்ப வில்லை என்று அரசியல் நோக்கர்கள் சொல்லுகிறார்கள். அது தவிர சூப்பர் ஸ்டார் ஒருவர் தான் இருக்க முடியும் அது ரஜினியை தான் வேறு யாரும் அந்த இடத்தை பிடிப்பதற்கு தகுதியற்றவர்கள் என்று ரஜினி ரசிகர்கள் விஜயை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் இந்த நிலையில் லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு இசையமைப்பாளர் அனிருத் வராமல் போனதற்கு ரஜினி தரப்பினரே காரணம் என்கின்றனர் சினிமா வட்டாரத்தினர் .

ரஜினியின் உறவினரான அனிருத் ரஜினி இதற்கும் யாரையும் அவர் விரும்பவில்லை என்றும் அவர்கள் நடத்தும் எந்த விழாவிலும் தான் கலந்து கொள்ள கூடாது என்று ரஜினி தரப்பு சொல்லப்பட்டுள்ளதால் கலந்து கொள்ளவில்லை என்கின்றனர் கோடம்பாக்கத்தினர்.

ஆனால் இந்த செய்தியை விஜய் தரப்பினருக்கு தெரிந்ததும் சொந்தமாக இசையமைக்க தெரியாமல் காப்பியடித்து அதை ட்ரெண்டிங் ஆகும் அனிருத் எந்த வகையிலும் தளபதி விஜய் புறக்கணிப்பதற்கு தகுதியற்றவர் ஆயிரம் இசையமைப்பாளர்கள் தளபதி படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கிறார்கள். இனிமேல் வரும் காலங்களில் விஜய் படத்திற்கு அனிருத்தை இசையமைக்க விஜய் விரும்ப மாட்டார் என்று சொல்லுகின்றனர் விஜய் தரப்பினர் அனிருத் தரப்பிற்கும் விஜய் ரசிகர்களுக்கும் மோதல் உருவாகிவிட்டது என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க.!