அஸ்தானா: ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீராங்கனைகள் இருவர் பதக்கம் வென்றுள்ளனர். 10-வது ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள அஸ்தானா நகரில் வருகிற 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் 26 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொண்டுள்ளது.
இந்திய தடகள அணியில் தமிழகத்தை சேர்ந்த இலக்கிய தாசன் (60 மீட்டர் ஓட்டம்), ஜெஸ்வின் ஆல்ட்ரின் (நீளம் தாண்டுதல்), பிரவீன் சித்ர வேல் (டிரிப்பிள் ஜம்ப்), சிவசுப்பிர மணியம் (போல்வால்ட்), அர்ச்சனா (60 மீட்டர் ஓட்டம்), ரோசி மீனா (போல்வால்ட்), பவித்ரா (போல்வால்ட்) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இந்திய தடகள அணிக்கு தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் தஞ்சாவூரைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல், மும்முறை தாண்டுதல் போட்டியில் கலந்துகொண்டு 16.98 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளி பதக்கத்தை தட்டி சென்றார்.
இந்நிலையில், தற்போது மகளிர் போல் வால்ட் போட்டியில் கலந்துகொண்ட தமிழக வீராங்கனை பவித்ரா வெள்ளிபதக்கமும், ரோசி மீனா பால்ராஜ் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர். முன்னதாக, ஆடவர் குண்டு எறிதல் போட்டியில், இந்தியாவின் நடப்பு தேசிய சாதனை படைத்த வீரரான தஜீந்தர்பால் சிங் தூர் தங்கப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.