chennireporters.com

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மூன்று லட்ச ரூபாய் நிதி அளித்த ஆவடி போலீஸ் கமிஷனர்.

தமிழக போலீஸ் வரலாற்றில் இதுவரை யாரும் அரசு மருத்துவமனைக்கு தன்னுடைய சொந்த பணத்திலிருந்து நிதி வழங்கியதாக வரலாறு இல்லை. 

 அரசு மருத்துவமனையில் ஏழைப் பொது மக்களின் நிலையை கண்டு மருத்துவமனையின் வளர்ச்சிக்காக தன்னுடைய சொந்த பணத்திலிருந்து சுமார் 2 லட்சத்து 99 ஆயிரத்து 400 ரூபாய் நன்கொடை அளித்திருப்பது ஐ.பி.எஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பாராட்டையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் ரூ. 2.99 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார்.

போதை ஒழிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆவடி காவல் ஆணையகரத்தில் மராத்தான் சிறப்பு ஓட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆர்வமுள்ள ஓட்டப்பந்தய வீரர்கள் சுமார் 3,500 பேர் கலந்து கொண்டனர்.

 

வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியில் பங்கேற்பாளர்களிடமிருந்து குறைந்தபட்ச பதிவு கட்டணம் நன்கொடையாக வசூலிக்கப்பட்டது.

அவ்வாறு வசூலான பணம் ரூ. 2 லட்சத்து 99 ஆயிரத்து 400ஐ ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கினார். அதனை குழந்தைகள் நல மருத்துவமனையின் குழந்தைகள் நல பேராசிரியர் சுப்பிரமணி பெற்றுக் கொண்டார்.

இதையும் படிங்க.!