chennireporters.com

லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய ஆவடி பத்திரப்பதிவாளர் மல்லிகேஸ்வரி.

ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் 2 லட்சம் ரூபாய் சிக்கியது.

 

ஆவடியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் இன்று 15ம் தேதி மதியம் 2:30 மணி அளவில் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர் ஐந்தரை மணி நேரம் நடைபெற்ற சோதனையில் 2 லட்சத்து 6 ஆறாயிரத்து 802 ரூபாய் சிக்கியது.

 

 

 

பத்திரப்பதிவாளர் மல்லிகேஸ்வரிக்கு  லஞ்சமாக கொடுக்க வைக்கப்பட்டிருந்த பணம் என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்.  கணக்கில் வராத பணமும் பல முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்.  10க்கும் மேற்பட்ட போலீசார் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜாய் தயால் கூறுகையில் மல்லிகேஸ்வரியின்  உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெயரில் உள்ள சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் அது தவிர அவருக்கு திருவண்ணாமலை, திருவள்ளூர், மப்பேடு ஆகிய பகுதிகளில்  வீடு, வீட்டுமனைகளும் விவசாய நிலங்களும் உள்ளதாக ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு பல புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது.

 

ஜாய் தயால்

அது தவிர மல்லிகேஸ்வரி தொடர்பாக புகார் சொல்ல விருப்பம் உள்ளவர்கள் தன்னுடைய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை சொல்லலாம் என்றும் தெரிவித்தார்.  ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த நான்கு ஆண்டு காலமாக பணியாற்றி வரும் மல்லிகேஸ்வரி மீது பல்வேறு ஊழல் புகார்கள் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக பத்திரப்பதிவு துறை ஐஜி சிவன் அருள் மற்றும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி அவர்களுக்கு பல்வேறு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன அந்த புகார்கள் இன்னும் நிலுவையில் உள்ளது .

தற்போது நாளொன்றுக்கு நூறு டோக்கன்களும் தக்கல் டோக்கன்கள் 12ம் பதிவு செய்யப்படுகிறது.  ஆனால் சராசரியாக சுமார் 75 டோக்கன்கள் மட்டுமே பத்திரப்பதிவு செய்யப்படுகிறது.  ஒரு டோக்கன் ஒன்றுக்கு அதாவது ஒரு பத்திரத்தை பதிவு செய்தால் சப் ரிஜிஸ்டர் மல்லிகேஸ்வரிக்கு ஆயிரம் ரூபாய் தர வேண்டும் அப்படி 75 டாக்குமெண்ட்க்கு 75 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக  தினந்தோறும் கொடுக்கப்படுகிறது. 

ஏற்கனவே 200 டோக்கன்கள் இருந்த பொழுது சராசரியாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை தினமும் லஞ்சமாக மல்லிகேஸவரி லஞ்சமாக  எடுத்துச் செல்வார் என்கிறார்கள் சில வழக்கறிஞர்கள்.  தினமும் அலுவலகம் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை இயங்கும் என்கிறார்கள் பல்வேறு புகார்கள் நிலுவையில் இருந்தாலும் இதுவரை மல்லிகேஸ்வரி மீது துறை ரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

சிவன் அருள்

பத்திரப்பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் ஆசியுடன் மல்லிகேஸ்வரி சுமார் நான்கு ஆண்டு காலத்திற்கு மேலாக ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மல்லிகேஸ்வரியின் வீடு

ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில் பாரதி என்பவரின் மணி பர்ஸ் அலுவலகத்தில் போலீசாருக்கு பயந்து தூக்கி வீசப்பட்டிருந்தது சோதனை நடந்து கொண்டிருந்த பொழுதே வெளியில் வந்த போலீசார் பாரதி என்பவர் யாராவது இருக்கிறீர்களா உங்களுடைய மணிபர்ஸ் உள்ளே இருக்கிறது என்று கூவி கூவி அழைத்தார்கள் ஆனால் யாரும் மணி பர்ஸ் தன்னுடையது என்று சொல்லி உரிமை கோரவில்லை.

எப்போதும் பத்திரப்பதிவு செய்த செய்ய வரும் பொது மக்களிடம் அதட்டலாக பேசும் பதிவாளர்  மல்லிகேஸ்வரி பயங்கர டென்ஷனில் இருந்தாராம்.   தனக்கு பணம் வாங்கி தரும் சில  ஏஜெண்டுகள் சோதனையில் மாட்டி கொண்டார்கள். இருப்பினும்  முக்கிய புரோக்கர்களான செல்வம், குங்கும பொட்டு சேகர், கிருஷ்ணன் ஆகியோர் தப்பித்தநு விட்டார்கள்.  இவர்கள் தான் தினமும் வசீலாகும் பணத்தை மல்லிகேஸ்வரிக்கு கொடுப்பவர்கள்.  இது தவிற நர்மதா, ஜேம்ஸ், தீபா ஆகிய மூவரும் மல்லிகேஸ்வரிக்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள்

 

இவர்கள் எடுத்துச் செல்லும் ஆவணங்களை சரி பார்க்காமலேயே பத்திரப்பதிவு செய்து கொள்வார் மல்லிகேஸ்வரி அதற்கு தனி ரேட் கொடுக்கப்படும் இது தவிர பார்த்தசாரதி, வெள்ளை வசந்தி ,அசார் பாய், இயாஸ் பாய், சசி என்டர்பிரைசஸ் சசி ,வள்ளி மயில் பினாமி ஜெய்தூன் இந்த ஆறு பேரும் ஸ்பெஷல் டாகுமெண்ட்களை மட்டும்தான் பதிவு செய்வார்கள்.

இவர்கள் கொடுக்கும் டாக்குமெண்ட்டை எந்த சோதனையும் இல்லாமல் மல்லிகேஸவரி ஓகே செய்து விடுவராம்.  எந்த பிரச்சினையும் இல்லாமல் பத்திரம்  பதிவு செய்யப்படும். ஒரு டாக்குமெண்ட் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக வழங்கப்படும்.

இடத்தின் தன்மைக்கு ஏற்றதைப் போல கமிஷனும் மாறும் என்கிறார்கள். இவர்கள் தான் பத்திரப்பதிவாளர் மல்லிகேஸ்வரியின் மிகப்பெரிய பலம் என்கிறார்கள். இவர்கள் பத்திரப்பதிவு செய்த ஆவணங்களை சோதனை செய்தால் மல்லிகேஸவரி சிக்கிவிடுவர் என்கிறார்கள்.

 

இதையும் படிங்க.!