chennireporters.com

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம். சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

தடை விலகியது:
தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பையோ, அதன் தலைவர் பிரபாகரனையோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாராட்டிப் பேசக் கூடாது என்ற போலீஸ் நிபந்தனைக்கு எதிராக மூத்த வழக்கறிஞர் துரைசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதியரசர் ஜி.சந்திரசேகரன் மூத்த வழக்கறிஞரின் வாதத்தை ஏற்றுக்கொண்டு, தம்முடைய உத்தரவில் தடை செய்யப்பட்ட இயக்கத் தலைவரைப் பாராட்டிப் பேசக்கூடாது என்பது நீதியானதோ, பொருத்தமானதோ அல்ல!

பேச்சுச் சுதந்திரத்தையும், அதன் வெளிப்பாட்டினையும் கட்டுப் படுத்தக் கூடாது” என ஆணையிட்டார். எனவே தடை செய்யப்பட்ட இயக்கத்தையோ அதன் தலைவரையோ யாரும் பாராட்டிப் பேசக்கூடாது எனும் போலீசாரின் தடையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராக மட்டும் இருப்பது ஒரு குற்றம் ஆகாது எனத் தடா சட்டம் பிரிவு 3 (5) அல்லது ஊபா சட்டம் பிரிவு 10 ஆகியவை தெளிவு படுத்துகின்றன என்பதையும் மாண்புமிகு நீதிபதி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூத்த வழக்கறிஞர்  திரு. துரைசாமி

சிறப்பான ஒரு தீர்ப்பை பெற்று தந்த மூத்த வழக்கறிஞர் திரு. துரைசாமி அவர்களுக்கு மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் சார்பாக நன்றி. இனி தலைவர் பிரபாகரன் பிறந்த நாளையோ, மாவீரர் நாளையோ நிபந்தனையுடன் கொண்டாட தடையில்லை.

இதையும் படிங்க.!