chennireporters.com

மனிதர்களுக்கு நன்மை தரும் செவ்வாழைப்பழம்.

பெண்களுக்கு பல நன்மைகளை அள்ளித் தரும் செவ்வாழை செவ்வாழைப்பழம் பொட்டாசியம் மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய தாதுக்களால் நிரம்பியுள்ளது.

 

செவ்வாழை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.

பெண்களின் இனப்பெருக்க ஹார்மோன் அளவை சமன் செய்து கருமுட்டை வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் ஆண்களின் விந்தணுக்களை அதிகரிக்க செய்கிறது.  பீட்டா கரோட்டினாய்டுகள் வைட்டமின் சி மற்றும் ஏ உள்ளிட்ட ஆன்ட்டி ஆக்சிடன்ட்களில் சக்தி அதிகமாகஉள்ளதால் கொலாஜன் உற்பத்தியை தூண்டி தோள் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

ப்ரீபயாடிக்குகள் உள்ளது மனித குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வீக்கத்தை குறைக்கிறது.ப்ரீபயாடிக்குகள் மலச்சிக்கலை தடுக்கும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.  சிவப்பு வாழைப்பழத்தில் கரோட்டினாய்டுகளாக லுடீன் மற்றும் பீட்டா கரோட்டின் இருப்பதால் பார்வையை மேம்படுத்த உதவுகிறது.

ரத்தத்தின் தரத்தையும் ஹீமோகுளோபின் எண்ணிக்கையையும் மேம்படுத்துகிறது வைட்டமின் பி 6 உள்ளதால் ரத்த சிவப்பணுக்களை அதிகளவில் உருவாக்க உதவுகிறது. பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த சிவப்பு வாழைப்பழம் ரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது.

ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் செல்லுலார் சேதத்தை தடுக்கின்றன. இதய நோய் நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களிலிருந்து காக்கிறது.

எனவே செவ்வாழை சாப்பிடுவதால் மனித சமூகத்தை பாதுகாக்கலாம் அனைவரும் செவ்வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்

இதையும் படிங்க.!