ஆவடி மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி மாற்றம் பின்னணி என்ன என்பது குறித்து அதிமுக தரப்பை சேர்ந்த சிலர் நம்மிடம் அதிர்ச்சி தரும் பல தகவல்களை சொன்னார்கள்.
இந்த தகவல்களை கேட்டு நாம் அதிர்ச்சி அடைந்தோம். அந்த அளவிற்கு இவர்கள் கொள்ளையடித்திருக்கிறார்கள் நகராட்சிகளின் இயக்குனர் பொன்னையா ஐ.ஏ.எஸ் பெயர் சொல்லியும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் பெயர் சொல்லியும் பல லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கிறது என்கிறார்கள். நிர்மலா தேவி பல முறைகேடுகள் செய்து தான் வேலையில் சேர்ந்தார் என்று பல்வேறு புகார்கள் இன்னும் நிலுவையில் உள்ளது என்கின்றனர்.
நிர்மலா தேவி பில்டிங் இன்ஸ்பெக்டர்.
நிர்மலா தேவியிடம் பில்டிங் கட்ட அனுமதி கேட்டு வரும் நபர்கள் ஒரு கிச்சனுக்கு கொடுக்கும் பணத்தை குறைத்துக் கொடுத்தால் அமைச்சர் நாசர் பெயரையும் அவரது மகன் ஆசிம் பெயரையும் சொல்லி மிரட்டுவாராம். அமைச்சர் பெயரை தவறாக பயன்படுத்தி பல லட்ச ரூபாய் கொள்ளையடித்திருக்கிறார் நிர்மலா தேவி என்கிறார்கள்.
அமைச்சர் தரப்பினரோ நிர்மலா தேவி சொல்வதைக் ஆராய்ந்து பார்க்காமல் கட்டிட அனுமதி கேட்டு விண்ணப்பித்தவர்களை அமைச்சர் தரப்பினர் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் சொல்கிறார்கள் இப்படி பல தில்லாலங்கடி வேலைகளை செய்து இருக்கிறார் திட்டக்குடிக்கு மாற்றப்பட்டுள்ள பிராடு பில்டிங் இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி.
நிர்மலா தேவியிடம் பில்டிங் கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பிப்பவர்களிடம் கிச்சன் ஒன்றுக்கு 30 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சமாக பெற்று வந்துள்ளார் இதுவரை நிர்மலா தேவி ஆவடி மாநகராட்சியில் பணியாற்றிய காலத்தில் எத்தனை இடங்களுக்கு கட்டிடம் கட்ட அனுமதி அளித்திருக்கிறார் என்ற கோப்புகளை ஆய்வு செய்து கட்டடம் கட்ட அனுமதி கேட்டவர்களிடம் நேரடியாக அழைத்து விசாரணை செய்தால் எவ்வளவு பணம் யார் மூலம் கொடுத்தார்கள் எப்படி நிர்மலா தேவிக்கு சென்றடைந்தது என்கிற தகவல் தெரியும் .
நிர்மலாதேவிக்கும் ஆவடியில் உள்ள பிரின்ஸ் என்ற புரோக்கர் தான் பணம் வாங்கி தருவாராம் அது தவிர லைசன்ஸ் சர்வேயர் சரவணன் நரேந்திரன் ஆகியோர்கள் தான் நிர்மலாவுக்காக பணம் வாங்கும் ஏஜென்ட் வேலை செய்பவர்கள்.
ஆவடியில் உள்ள சுமங்கலி நகைக்கடை உரிமையாளர் பரத் நிர்மலாவுக்கு மிகவும் நெருக்கமானவராம். பரத்துக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் தான் நிர்மலா தேவி ஓய்வு எடுப்பாராம் . பரத்தின் ரியல் எஸட்டேட்டில் தொழிலுக்கு நிர்மலாதேவி பல உதவிகளை செய்துள்ளாராம். பரத்தின் மூலம் ஆவடி மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டு மனைகளை வாங்கி வைத்திருக்கிறாராம் நிர்மலாதேவி.
சுமங்கலி பரத்.
நிர்மலா தேவி அமைச்சர் நேரு, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆகியோருக்கு மாதம் 30 லட்சம் ரூபாய் மேல் கப்பம் கட்டுவதாக ஆவடியில் உள்ள சில முக்கிய ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் கூறியிருக்கிறார். அதனால் தான் தன்னை மாற்றாமல் அமைச்சர் நேருவும் பொன்னையாவும் காப்பாற்றி வருவதாக சொல்லி வந்தார் நிர்மலா.
ஆனால் நிர்மலா தேவியை தலையில் ஓங்கி அடித்ததை போல திட்ட குடிக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறது நகராட்சி நிர்வாகம் இப்போது பொன்னையாவுக்கு கப்பம் கட்டவில்லை அதனால் தான் என்னை பணிமாற்றம் செய்தார் என சொல்லப் போகிறாரா இல்லை பொன்னையாவின் பெயர் சொல்லி பல லட்ச ரூபாய் சுருட்டி எடுத்துக் கொண்டதனால் ஏற்பட்ட விளைவு இதுவா என்ன சொல்லப்போகிறார் நிர்மலா தேவி?
நிர்மலா தேவி பற்றி பல்வேறு புகார்கள் அமைச்சர் நேரு மற்றும் பொன்னையா லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பல புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது. அந்த புகாரில் நிர்மலா தேவியின் ஆதி முதல் தற்போது உள்ள நிலைப்பற்றி மஞ்சள் பத்திரிகை தரத்திற்கு புகார் கூறப்பட்டுள்ளதாம்.
ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் சிலர் நிர்மலா தேவி செய்த அட்டூழியங்களை கண்டு கோபமடைந்திருக்கிறார்கள் நிர்மலா தேவி தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் லஞ்சம் வாங்குவதையும் நிறுத்த மாட்டார் போட்டுக் கொடுக்கும் குணத்தையும் மாற்றிக் கொள்ள மாட்டார் என்கிறார்கள்.
நிர்மலா தேவியால் பாதிக்கப்பட்ட புரோக்கர்கள் நிர்மலாதேவி இடம் பில்டிங் கட்ட அனுமதி கேட்டு பணம் கொடுத்து ஏமாந்துள்ள புரோக்கர்கள் பலர் தற்போது ஆவடி மாநகராட்சியில் புலம்பி வருகிறார்கள் அவர்களுக்கு நிர்மலா தேவி வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுப்பாரா இல்லையா என்பது பல பில்லியன் டாலர் கேள்வி?