chennireporters.com

ஆவடி தாசில்தார் மணிகண்டன் மீது அம்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு.

ஆவடி தனி வட்டாட்சியர் மணிகண்டன் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர் அம்பத்தூர் தாலுக்கா அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக பணியாற்றிய பொழுது 25 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு போலி பட்டா வழங்கியது தொடர்பாக அவர் மீது நம்பிக்கை மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு அம்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி அம்பத்தூர் காவல் நிலையத்தில் தாசில்தார் மணிகண்டன் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது சீட்டிங் மற்றும் போலியான கையெழுத்து ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. FIR. NO: 2801 சட்டப்பிரிவு 420, 465, 467, 468, 471 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த வழக்கு அம்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது .

அண்ணா நகரை சேர்ந்த கே.வி. ரத்தினம்   இவர் அம்பத்தூர் காவல் நிலையத்தில்  குற்றப்பிரிவு போலீசில்  புகார் அளித்துள்ளார்.  அந்தப் புகாரில் எனக்கும் எனது நண்பர் ஜெயராமனுக்கும் கொரட்டூர் கிராமத்தில் சர்வே எண் 162ல் 93 சென்ட் விவசாய நிலம் உள்ளது.  இந்த இடம் 1985 ஆம் ஆண்டு முதல் எங்களிடம் உள்ளது. இந்த இடத்திற்கு செட்டில்மெண்ட் பட்டா  வழங்கப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு வருவாய்துறை பட்டா கேட்டு நாங்கள் அம்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தோம் ஆனால் பட்டா கிடைக்கவில்லை. இதன் பின் நாங்கள் அங்கு துணை தாசில்தாராக பணியாற்றிய மணிகண்டன் என்பவரை சந்தித்து முறையிட்டோம் அவர் பட்டா வாங்கி தருவதாக எங்களுக்கு வாக்குறுதி அளித்தார்.

இந்த இடம் ரயிட் வாரி  ( RYOT) பட்டாவாக இருப்பதால் இதை வருவாய்த்துறை பட்டாவாக மாற்றுவதற்கு பணம் இல்லாமல்  ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிவித்தார். பணம் கொடுத்தால் பட்டா கிடைக்கும் என்று சொல்லி  எங்களிடம் முதலில் பதினாறு லட்சம் ரூபாய் கேட்டார் மேலும் இந்த தொகை இல்லாமல் பட்டா சம்மந்தமாக எந்த வேலையும் நடக்காது என்று எங்களிடம் தெரிவித்தார். வருவாய்த்துறை பட்டா இல்லாமல் 93 சென்ட் இடம் எதற்கும் பயன்படாது என்று அவர் தெரிவித்தார்.

மேலும் அந்த இடத்தை அரசே திரும்ப எடுத்துக் கொள்ளக்கூடும் என்று எங்களை பயமுறுத்தினார். வேறு வழி இன்றி அவர் கேட்டுக் கொண்டபடி பதினாறு லட்சத்தை எனது வங்கிக் கணக்கில் இருந்து இரண்டு தடவையாக எடுத்துக் கொண்டு 22.6.2016 ஆம் தேதி மணிகண்டன் அவர்களை அம்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் சந்தித்து அவரிடம் பணத்தை கொடுத்தேன் அப்போது என்னுடன் ஜெயராமன் ராஜேஷ் கண்ணன் மற்றும் சக்திவேல் ராஜா ஆகியோர் உடன் இருந்தார்கள்.

மேலும் நாங்கள் அவரை அம்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தை வைத்து பலமுறை சந்தித்து நினைவூட்டினோம் . அவரும் பட்டாவிற்கு ஏற்பாடு செய்து வருவதாக உறுதி அளித்தார்.  2016 ஜூன் மாதம் கடைசி வாரத்தில் எங்களை அழைத்து மேலும் பட்டா செலவிற்கு ரூபாய் ஒன்பது லட்சம் தேவை என்று கேட்டார்.  மீண்டும் அதை அவரிடம் கொடுத்தோம் நம்பிக்கையுடன் சென்று வாருங்கள் விரைவில் உங்கள் கைக்கு பட்டா வந்துவிடும் என்று எங்களுக்கு நம்பிக்கை வாக்குறுதி கொடுத்து அனுப்பினார்.

2016 அக்டோபர் மாதம்  இறுதி வாரத்தில் துணை தாசில்தார் மணிகண்டன்  தாலுக்கா ஆபிசுக்கு எங்களை வர சொன்னார். நாங்களும் அவரை அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் சந்தித்தோம் . அப்போது உங்கள் பட்டா ரெடி ஆகிவிட்டது பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி நகல் எண் 136/215 சி 1 தேதி இல்லை ஒன்பதாவது மாதம் 2014 என்று  குறிப்பிட்டுள்ள அம்பத்தூர் வட்டாட்சியர் அவர்களின் செயல்முறை அறிக்கைப்படி ஒரு ஆணையை எங்களிடம் கொடுத்தார்.  இந்த உத்தரவு தான் உங்களின் பட்டா என்று தெரிவித்தார்.  நாங்கள் அதை எடுத்துக் கொண்டு நேராக அம்பத்தூர் தாசில்தார் கலைச்செல்வி அவர்களை நேரில் சந்தித்து பட்டா வழங்கியதற்கு அவருக்கு நன்றி தெரிவித்தோம்.

அப்போது அவர் அந்த ஆணையை வாங்கி படித்துவிட்டு இந்த ஆணை என்னால் வழங்கப்படவில்லை என்றும் இது போலி என்றும் தெரிவித்தார். அப்போது நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.  தாசில்தார்  கலைச்செல்வி இந்த அலுவலகத்தில் யாரோ உங்களை ஏமாற்றி இருக்கிறார்கள் நீங்கள் முறைப்படி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என்று எங்களிடம் சொன்னார்.

அம்பத்தூர் தாலுக்கா அலுவலகத்தில் 2015 மற்றும் 16 ஆம் வருடங்களில் பணிபுரிந்து வந்த துணை தாசில்தார் மணிகண்டன் போலி பட்டா கொடுத்து எங்களை ஏமாற்றியுள்ளார் என்பது அப்போதுதான் எங்களுக்கு தெரியவந்தது. அவரை அவரது அலுவலகத்தில் சந்திக்க சென்று பார்த்த போது அவர் எங்களை சந்திக்க மறுத்துவிட்டார். ஏற்கனவே நாங்கள் அவர் வீட்டிற்குச் சென்று போலி பட்டா வழங்கப்பட்டது குறித்து கேட்டோம் என்னிடம் வந்தால் உங்களை வேறு மாதிரி கையாள வேண்டி இருக்கும் என்று எங்களை மிரட்டி அனுப்பினார்.

துணை தாசில்தாராக பணிபுரிந்து வந்த மணிகண்டன் எங்களை வருவாய்த்துறை பட்டா தருவதாக கூறி மொத்தம் 25 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு போலியான ஒரு ஆணையை தயார் செய்து அதில் போலி முத்திரை மற்றும் அம்பத்தூர் தாசில்தார் அவர்களின் கையெழுத்தை போலீயாக போட்டு ஒரு போலியான ஆணையை எங்களுக்கு கொடுத்து ஏமாற்றியுள்ளார். 

இந்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அம்பத்தூர் ஜுடிசியல் மேஜிஸ்ட்ரேட்  கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது.  இந்த வழக்கு தற்போது அம்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மணிகண்டன் தாசில்தார் பணியில் சேர்ந்த காலங்களில் இருந்தே திருடுவதையும் ஏமாற்றுவதையும் போலியாக அரசு முத்திரையைதயார் செய்து அதிகாரிகளின் கையெழுத்தை போலியாக போடுவதில்  கைதேர்ந்தவராக செயல்பட்டு வருகிறார் என்பது இதன் மூவம் தெரிகிறது.

மணிகண்டன் ஆவடி தாலுக்கா அலுவலகத்தில் தனி வட்டாட்சியராக தற்போது பணியாற்றி வருகிறார் ஏற்கனவே இங்கு தனி வட்டாட்சியராக பணியாற்றி இருக்கிறார் இரண்டு முறை அவர் தனி வட்டாட்சியராக பணியாற்றிய பொழுது பல்வேறு போலியான ஆவணங்களை பயன்படுத்தி எடுத்து வந்த நபர்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரசு இடங்களை சில விஐபிகளுக்கு கொடுத்து  சுய லாபம் அடைந்து இருக்கிறார்.  இது தொடர்பாக கலெக்டர் ஆல்ஃபி ஜான் வர்கீஸுக்கும், வருவாய்த்துறை செயலாளருக்கும் புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தாசில்தார் மணிகன்டன் மீது இது மாதிரி பல போலி பட்டா கொடுத்த புகார்களும், வழக்குகளும் நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இதையும் படிங்க.!