சங்கரதாசு சுவாமிகளின் பெயரை மாற்றுவதா? ஐயா பழ. நெடுமாறன் கடும் எதிர்ப்பு.

October 26, 2022

By ரா. ஹேமதர்சினி

சங்கரதாசு சுவாமிகளின் பெயரை மாற்றுவதற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமானதும், தமுக்கம் திடலில் அமைந்திருப்பதுமான கலை அரங்கத்திற்குத் தமிழ் நாடக உலகின் மறுமலர்ச்சித் தந்தையான சங்கரதாசு சுவாமிகளின் பெயர் சூட்டப்பட்டிருந்தது.

அந்தக் கலை அரங்கைப் புதுப்பித்துக் கட்டிய பிறகு சங்கரதாசு சுவாமிகளின் பெயர் விளம்பரப் பலகையில் காணப்படவில்லை. இதைப் பயன்படுத்திக்கொண்டு அதற்கு ராணி மங்கம்மாளின் பெயரைச் சூட்டவேண்டும் என்று தெலுங்கு சங்கத்தினரின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் மதுரையில் நடத்தப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 

மதுரை நகராட்சியாக இருந்தபோது இந்தக் கலை அரங்கம் கட்டப்பட்டு அதற்கு முன்பாக சங்கரதாசு சுவாமிகளின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. அதை மாற்றுவதற்கு நடைபெறும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தி அக்கலை அரங்கத்திற்கு சங்கரதாசு சுவாமிகளின் பெயரையே சூட்டும்படி முதலமைச்சரை வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share:

ரா. ஹேமதர்சினி

October 26, 2022

Leave a Comment