பிறந்து எட்டு நாட்களான ஆண் குழந்தைக்கு சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி ராஜா அவர்களின் பெயரை வைத்திருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன்.
தமிழக அரசியல் வரலாற்றில் பிறந்த குழந்தைகளுக்கு குறிப்பாக அரசியல் கட்சி தலைவரின் பெயர்கள் அல்லது சினிமா நடிகர்களின் பெயர்கள் அல்லது சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளின் பெயர்கள் வைப்பது வழக்கமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சைல்ட் வெல்ஃபேர் கமிட்டி இணைந்து பிறந்த எட்டு நாளான ஆண் குழந்தைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா அவர்களின் பெயரை சூட்டி இருக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன்.
இந்த செய்தி வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் பேசு பொருளாகி உள்ளது. இனிமேல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் உள்ள வழக்கறிஞர்களின் குழந்தைகளுக்கும் இது போல நீதிபதிகள் மற்றும் சிறந்த வழக்கறிஞர்களின் பெயர்களை சூட்ட முன் வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.