chennireporters.com

பள்ளி சிறுவர்களை பாராட்டிய கலெக்டர்.

திருவள்ளூரில் இரண்டு பள்ளி மாணவர்கள் ரூ 15 ஆயிரம் பணத்தை சேர்த்து வைத்து புத்தகம் வாங்கியதை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்  அவர்கள் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்த எங்கள் உண்டியல் எங்க புத்தகம் திட்டத்தின் படி ரூ.15 ஆயிரம் சேமித்து வைத்து புத்தகம் வாங்கிய மணவாளநகர் சிறுவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டு  தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மார்ச் 30 : திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு முதன் முறையாக புத்தக திருவிழா நடை பெற்றது.

அப்போது சிறுவர்களிடையே புத்தகம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் கடந்த ஆண்டு நடை பெற்ற புத்தக திருவிழாவில் புத்தகங்களை வாங்குவதற்கு தேவையான தொகையை சேமிப்பதற்காக எங்கள் உண்டியல் எங்க புத்தகம் என்ற திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் 100 குழந்தைகளுக்கு உண்டியல்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

 

இந் நிலையில் இந்த ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் நடைபெற்று வரும் முதலாவது புத்தகத் திருவிழாவில் திருவள்ளூர் மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் முருகன் காமாட்சி தம்பதியினரின் மகன்களான யுகன் (8 வயது) கோகுல மாயோன் (5வயது) ஆகிய இருவரிடம் கடந்த ஆண்டு கொடுத்த உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.15 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் இடம் வழங்கி புத்தகங்களை வாங்கினர். இதனையடுத்து குழந்தைகளின் ஆர்வத்தை வெகுவாகப் பாராட்டினார்.

 

இந்த நிகழ்ச்சியின் போது ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ், தனி சிறப்பு வட்டாட்சியர் எம்.ஆர்.தமிழ்செல்வன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் கோ.மலர்விழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபிநேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க.!